சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்கள் கூறும் இந்த அறிவுரை, மாணவர்களுக்கு மட்டும் தானா... அவர்களே, ஆட்சி நிர்வாகம், டெண்டர்ன்னு நிறைய விஷயங்களைப் பற்றி, உங்களிடம் கேள்வி கேட்கலாம்... நீங்களும் பதிலோடு தயாரா இருக்கீங்க... அப்படி தானே' என, கேட்கத் துாண்டும் வகையில், தமிழக கைத்தறி துறை அமைச்சர் மணியன் பேச்சு: மாணவ பருவத்தில் கேள்விகள் பல கேட்க வேண்டும். அப்போது தான், ஞானம் உண்டாகும். கேட்பதை விட, படிப்பதை விட, செய்யும் செயல் தான், மிகவும் முக்கியமானது; அது, சிறப்பாக இருக்க வேண்டும்.


'நல்ல வேளை, நான் உங்களுக்கு அண்ணன்னு சொல்லாம விட்டீங்களே...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேச்சு: இப்போதுள்ள மாணவர்களுக்கு, எம்.ஜி.ஆர்., பற்றி சரி வர தெரியவில்லை. அவர், மாணவர்களான உங்களுக்கு எல்லாம் தாத்தா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உங்களுக்கு பாட்டி. அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நல்ல பெயரை வாங்க வேண்டும் என, மாணவர்களுக்கு அறிவுறுத்தியவர், எம்.ஜி.ஆர்.,
'சட்டம் - ஒழுங்கை சரி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத் தான், அந்த தலைவர்கள், தமிழகம் வந்து சென்றனரோ...' என, கேள்வி எழுப்பும் வகையில், தமிழக உணவுத்துறை ?அமைச்சர் காமராஜ் பேட்டி: தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சரியில்லை எனக் கூறுவதில் உண்மைஇல்லை. சீன அதிபரும், நம் பிரதமர் மோடியும், தமிழகம் வந்து சென்றதே, நம் மாநிலத்தில், சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளது என்பதற்கான அடையாளம்.
'உங்களுக்கு, காங்கிரசையும், தி.மு.க.,வையும் இழுக்காமல், பேட்டி அளிக்கவே முடியாதே...' என, மடக்க தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா பேச்சு: முந்தைய காங்., ஆட்சியின் போது, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. இப்போதைய பிரதமர் மோடி முயற்சியால் தான், தமிழகத்தில், எந்த தடையும் இன்றி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
'விளையாட்டு மைதானங்கள் எல்லாம், வீடுகளாகவும், வீட்டு மனைகளாகவும் ஆகி விட்டதே... இளைஞர்கள் எங்கே சென்று விளையாடுவர்...' என, கிடுக்கி போடும் வகையில், தமிழக தமிழ் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு: இளைஞர்கள், விளையாட்டை, வெறும் விளையாட்டாக பார்க்காமல், வாழ்க்கை மற்றும் பணியாக பார்க்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைப்பதன் மூலம், நல்ல வேலைவாய்ப்புகளை பெற முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X