சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயிலில் விரல் துண்டான பெண் முதலுதவி கிடைக்காமல் தவிப்பு

Added : ஜன 16, 2020
Advertisement

சிதம்பரம்,: ரயில் பயணத்தின் போது விரல் துண்டான பெண், முதலுதவி கிடைக்காமல் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் வினோத். கடந்த 13 ம் தேதி காலை சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு (வ.எண். 17795) ரயிலில் மனைவி சரண்யா, 35; மற்றும் 5 வயது மகளை முன்பதிவு செய்து அனுப்பி வைத்தார். கடலுார் அருகே ரயில் சென்றபோது, இரும்பு ஜன்னல் திடீரென விழுந்து, சரண்யாவின் இடது கை விரல் துண்டானதால் அலறி துடித்தார்.
சரண்யாவின் தொங்கிய விரலை, சக பயணிகள் துணிவைத்து கட்டினர். டி.டி.ஆர்., மற்றும் ரயில்வே போலீசாரிடம் முதலுதவிப் பெட்டி கேட்டுள்ளனர். அவர்கள் இல்லையென கூறியதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவம் பார்ப்பதற்கான எவ்வித முயற்சியும் எடுக்க வில்லை.
வலியில் துடித்த பெண்ணுக்கு, பயணிகள் சிலர் செய்த முன்னேற்பாட்டின் பேரில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டது. மயிலாடுதுறையில் இறங்கி, நிலைய அதிகாரியிடம் புகார் கூறினர். அவர் அலட்சியமாக பதில் அளித்ததால், பயணிகளுக்கும், அதிகாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் மயிலாடுதுறை தனியார் மருத்துவமனையில் அப்பெண் சிகிச்சை பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X