சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை கொள்ளையர்களை கஸ்டடி எடுக்க திட்டம்

Added : ஜன 16, 2020
Advertisement

கோவை: கோவையில் தொடர் நகை கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கோவை துடியலுார், தடாகம் ரோடு, வெள்ளக்கிணறு பகுதிகளில் வீடுகளில் பூட்டை உடைத்து, நகை கொள்ளை சம்பவம் அதிளவில் நடந்தது.
துடியலுார் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கடந்த டிச., ல் ராஜசேகர், 38 என்பவரை கைது செய்தனர்.124 பவுன் தங்க நகைகளை மீட்டனர். விசாரணையில், மதுரையை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் தொடர்புடையது தெரிந்தது.
இவர், கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் மண்ணுாத்தி நகை கொள்ளையில் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும், கேரள சென்ற துடியலுார் போலீசார் சுரேஷிடம் விசாரணை நடத்தி திரும்பியுள்ளனர்.
அடுத்தடுத்து தொடர் நகை கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட தென்காசியை சேர்ந்த புலிப்பாண்டி போலீஸ் பிடியில் சிக்கி, பாளையங்கோட்டை சிறையில் உள்ளார்.
இந்த மூவரும் தனிதனி குழுவாக பிரிந்த கோவை பகுதியில் நகை கொள்ளை சம்பவங்களில் ஈடுப்படிருப்பதால் இவர்களை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்த கோவை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X