சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., வில்சனை கொன்றது ஏன்? பயங்கரவாதிகள் திடுக் வாக்குமூலம்

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 எஸ்.ஐ., வில்சனை கொன்றது ஏன்?   பயங்கரவாதிகள் திடுக் வாக்குமூலம்

நாகர்கோவில் :எஸ்.ஐ., வில்சனை கொலை செய்த பயங்கரவாதிகள் இருவரிடமும், நேற்று தக்கலையில் விசாரணை நடந்தது. இரவு வரை நீண்ட விசாரணையில், கொலைக்கான காரணம் குறித்து, இருவரும் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில், எஸ்.ஐ., வில்சன், ஜன., 8 இரவு, 9:30 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார். நாகர்கோவில் இளங்கடை தவுபிக், 28, திருவிதாங்கோடு அப்துல்சமீம், 32, ஆகியோர் இதில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள் வீடுகளில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தியிருந்தனர். கர்நாடக மாநிலம், உடுப்பியில், தவுபிக், அப்துல் சமீம் சிக்கினர். இவர்களை, எஸ்.பி., ஸ்ரீநாத் தலைமையிலான குழுவினர், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு களியக்காவிளை அழைத்து வந்தனர். அங்கு, இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, தக்கலை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, இரவு வரை விசாரணை நடந்தது. எஸ்.பி., ஸ்ரீநாத் விசாரித்த நிலையில், மதியம், டி.ஐ.ஜி., பிரவின் குமார் அபினவ் வந்தார். பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளும் விசாரித்தனர். குடியரசு தின விழாவில் அசம்பாவிதம் நடத்த திட்டமிடப்பட்டதா என, இரவு வரை விசாரணை நீண்டது.பயங்கரவாதிகள் தெரிவித்தது குறித்து, போலீசார் கூறியதாவது:'தமிழ்நாடு நேஷனல் லீக் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அல் உம்மா போன்ற இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்த, முயற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். இஸ்லாமிய இயக்கத்தினரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர்.

அதற்கு பழிவாங்கும் வகையில் தான், வில்சனை கொலை செய்தோம். இவ்வாறு செய்வதால், இஸ்லாமிய இயக்கங்களில், எங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என நினைத்தோம். எங்களை கொன்று விடுங்கள்; அல்லா எங்களை ஏற்றுக் கொள்வார்.மேற்கண்டவாறு, இருவரும் கூறினர். விசாரணையின் போது, அவர்களிடம் பதற்றமோ, கவலையோ இல்லை; இறுக்கமாக இருந்தனர்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.raj-chennai - chennai,இந்தியா
17-ஜன-202010:21:57 IST Report Abuse
p.raj-chennai தம்பிகளுக்கு 2 ஜாமீன் பார்சல் ...............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X