சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டிவி' நடிகை தற்கொலை முயற்சி

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (2)
Advertisement


சென்னை, 'டிவி' நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.வம்சம், தேவதை உள்ளிட்ட, டிவி சீரியல்களில் நடித்தவர் ஜெயஸ்ரீ; விவாகரத்து ஆனவர். எட்டு வயது மகளுடன் வசித்து வந்த இவர், தன்னுடன், கல்யாண பரிசு உள்ளிட்ட, 'டிவி' சீரியல்களில் நடித்த, ஈஸ்வர் ரகுநாத் என்பவரை காதலித்து, 2013ல் திருமணம் செய்தார்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், தன் கணவருக்கும் மற்றொரு நடிகைக்கும் தகாத உறவு உள்ளது. மேலும், தன் பெயரில் உள்ள, சொத்து ஆவணங்களை அடகு வைத்து, 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். தன் மகளுக்கும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறார் என, அடையாறு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் ஈஸ்வர் ரகுநாத்தை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ, நேற்று, காஞ்சிபுரம், கூடுவாஞ்சேரியில் உள்ள, தனியார் தங்கும் விடுதிக்கு சென்று, துாக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுஉள்ளார். அதற்கு முன், ரேஷ்மா என்ற டிவி சீரியல் நடிகைக்கு தன் தற்கொலைக்கான காரணம் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில், 'ஆடியோ' அனுப்பி உள்ளார்.ரேஷ்மா உள்ளிட்டோர், ஜெயஸ்ரீயை மீட்டு, நீலாங்கரையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும், ஜெயஸ்ரீ தன் கணவருக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதம்:பால், மளிகை பொருட்கள் வாங்க கூட முடியாத நிலைக்கு, என்னை ஆளாக்கி விட்டீர்கள். என்னையும், என் மகளையும் ஒரு போதும் கைவிட மாட்டீர்கள் என, முழுமையாக உங்களை நம்பினேன்.ஆனால், எங்களுக்கு துரோகம் செய்து விட்டீர்கள். உங்களுக்கு என் உயிர் தான் வேண்டும் என்றால், எடுத்துக் கொள்ளுங்கள். என் மகளை விட்டுவிடுங்கள்.இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி குறித்து, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
17-ஜன-202019:36:43 IST Report Abuse
naadodi விஷ்ணுவிஷால் மீண்டு வந்ததை படியுங்கள் அம்மா ..உங்கள் வாழ்வும் மலரும், மலரவேண்டி வாழ்த்துகிறோம்..
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
17-ஜன-202005:42:57 IST Report Abuse
vasumathi intha அம்மாவுக்கு நாட்டியம் நல்லா வரும். நம்பிக்கையோட அனிதா Ratnam மாதிரி வாழ வேண்டும். பாவம் அந்த சின்ன பெண்ணை தனியாக விட்டு செல்ல என்ன மனமோ ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X