'விடுதியில் சம்பாதிக்க பழங்குடியினரா ? கேரளாவில் நக்சல்கள் எச்சரிக்கை

Added : ஜன 16, 2020
Advertisement


பந்தலுார்: 'கேரளா வனங்களை ஒட்டிய, சொகுசு விடுதி உரிமையாளர்கள் பழங்குடியினரை தங்கள் வருவாய்க்கு பயன்படுத்த கூடாது,' என, நக்சல்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் மேப்பாடி அட்டமலை வனத்தை ஒட்டிய, தனியார் சொகுசு விடுதி மீது, துப்பாக்கிகளுடன் வந்த நக்சல்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அதில், விடுதியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியது. விடுதி பணியாளர்கள் வெளியே வந்தபோது, வனத்திற்குள் சென்று மறைந்தனர்.
மேலும், விடுதியின் முகப்பு பகுதியில் போஸ்டர்களையும் ஒட்டி சென்றனர். மலையாளத்தில் எழுதப்பட்ட போஸ்டரில், 'கேரளா மாநிலத்தில் பழங்குடிகளுக்கு எதிராக அரசு செயல்படுகிறது. வனங்களை ஒட்டிய சொகுசு விடுதிகளில், பழங்குடியினர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சேகரிக்கும் மலைவிளைபொருட்கள், தேன் உள்ளிட்டவற்றை குறைந்த விலைக்கு வாங்கி, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கின்றனர்.
மேலும் காட்சி பொருளாக பயன்படுத்தும் பழங்குடியினர்களை, தங்கள் விடுதிகளுக்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்தியும், வனத்தின் தடை செய்யப்பட்ட பகுதிகளில், வெளிமாநில, வெளிநாடு சுற்றுலாப்பயணிகளை அழைத்து செல்லவும் பயன்படுத்துகின்றனர்.
எனவே, பழங்குடியினர்களை தங்கள் வருவாய்க்கு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்; இல்லையெனில் விபரீதம் நடக்கும்,' என, தெரிவிக்கப்பட்டடுள்ளது.
'தாங்கள் நாடுகாணி மற்றும் கபினி தளங்களின் நிர்வாகிகள்,' எனவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தகவலறிந்த மேப்பாடி போலீசார் விடுதியை சுற்றிலும் கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், ஆய்வு மேற்கொண்டனர். இதனால் மேப்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X