அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு காவி வேட்டியில் வாழ்த்து

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (53)
Share
Advertisement
ஸ்டாலினுக்கு காவி வேட்டியில் வாழ்த்து

கரூர் : பொங்கல் தினத்தை முன்னிட்டு, காவி வேட்டியில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தால், நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மத்திய, பா.ஜ., அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தேசிய கல்வி கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம், 'நீட்' தேர்வு உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் போராட்டங்கள் நடத்தி வருகிறார். மேலும், பா.ஜ.,வினர் இணைய தளத்தில் திருவள்ளுவரை காவி உடையில் படத்தை வெளியிட்ட போது, கண்டனத்தை பதிவு செய்தார்.
மேலும், 'தமிழகத்தை காவி மயமாக்க விட மாட்டோம்' என்றும் பேசி வருகிறார். இதனால், தி.மு.க.,வினர் காவி நிற உடை அணிவதை கூட தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு, சென்னையில், ஸ்டாலினை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி வாழ்த்து பெற்றார். அப்போது, அவர், தி.மு.க., கரை வேட்டியில் செல்லாமல் காவி வேட்டி கட்டியிருந்தார்.
இந்த புகைப்படத்தை, தன் பேஸ் புக் பக்கத்தில் செந்தில்பாலாஜி பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். இதுபோன்ற விமர்சனங்களுக்கு சளைக்காமல் பதிலடி கொடுக்கும், தி.மு.க.,வினர், அமைதி காத்து வருகின்றனர்.
அ.தி.மு.க.வில் இருக்கும் போது, கோவிலுக்கு மாலை போடுவது, அக்னி சட்டி, மொட்டை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது பிரச்னை இல்லை. ஆனால், பகுத்தறிவு கட்சி என அறியப்படும், தி.மு.க.,வில் காவி வேட்டி கட்டிக் கொண்டு போகலாமா. அப்படி கோவில் மாலை அணிந்திருந்தால், வேறு வேட்டியில் சென்று வாழ்த்து பெற்று இருக்கலாம். இப்படி காவி வேட்டியில் சென்று பலர் கிண்டல், கேலிகளை தவிர்த்திருக்கலாம் என, அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Lal - coimbatore,இந்தியா
23-ஜன-202000:05:14 IST Report Abuse
Ramesh Lal காவி என்பது பொதுவானது. காவி வேஸ்டியானாலும், சேலையானாலும் , துண்டுவானாலும் எம்பெருமானுக்கு, முருகனுக்கும் , ஏனைய தெய்வங்களை வணங்குபவர்களுக்கு பொதுவானது . இது பி ஜெ.பி. இன் சொத்தல்ல.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
19-ஜன-202012:58:55 IST Report Abuse
bal ஸ்ரீரங்கத்தில் நெற்றியை அழித்தார்...சுடலை..அது போல் வேட்டியை உருவவில்லை...சந்தோஷம்.
Rate this:
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
18-ஜன-202013:50:51 IST Report Abuse
I love Bharatham மக்களை குழப்பணும் ....ஸ்டாலின் சொல்லி தான் வந்திருக்கமுடியும் ....அவருக்கு இந்த இங்கிதம் கூட தெரியாதா ......அதுவும் இந்து மக்களை குழப்பணும் .....அப்ப தான்..மீனும் பிடிக்கமுடியும் ....செகுளுரிசம் பேச முடியும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X