சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நூதன முறையில் மணல் திருட்டு இருவர் கைது; லாரிகள் பறிமுதல்

Added : ஜன 16, 2020
Advertisement


வேப்பூர் :பல மாதங்களாக, நுாதன முறையில் மணல் திருடி சென்ற இரண்டு டிரைவர்களை கைது செய்த போலீசார், லாரிகளை பறிமுதல் செய்தனர்.

கடலுார் மாவட்டம் வேப்பூர் அடுத்த மேமாத்துார் மணிமுக்தாற்றில் மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து விருத்தாசலம் - சேலம் சாலையில், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அடுத்தடுத்து வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில், லாரிகளில் தேங்காய் மட்டை மூட்டைகள் அடுக்கப்பட்டு, தார் பாயால் மூடப்பட்டுடிருந்தது. இருப்பினும், லாரியின் பின்கதவு வழியாக தண்ணீர் கசிந்ததால் சந்தேகமடைந்த போலீசார், லாரிகளை சோதனை செய்தனர்.
லாிரியில் மணல் ஏற்றப்பட்டு, அதன் மீது மூட்டைகளை வைத்து, தார்பாயால் மூடி , சரக்கு ஏற்றி செல்வது போல் எடுத்து சென்றுள்ளனர். இது போல் பல மாதங்களாக மணல் திருட்டு நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, லாரி டிரைவர்கள் சேலம் மாவட்டம், புளியம்பட்டியை சேர்ந்த ஜெகநாதன், 45; அண்ணா நகரை சேர்ந்த வெங்கடாசலம், 49; ஆகியோரை கைது செய்த போலீசார், லாரிகளை (டிஎன் 52 டி 4888, டிஎன் 52 ஜே 1771) பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர் ஓமலுாரைச்சேர்ந்த செந்தில் குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X