சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.10க்கு சிகை அலங்காரம் போஸ்டர் ஒட்டியவர், 'எஸ்கேப்'

Added : ஜன 16, 2020
Advertisement


விழுப்புரம் :பொங்கல் பண்டிகையையொட்டி, விழுப்புரத்தில் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் சிகை அலங்காரம் என அறிவித்து நகரில் போஸ்டர் ஒட்டியவர், கடையை மூடிச் சென்ற சம்பவம், விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீபாவளி, பொங்கல் உட்பட பல்வேறு பண்டிகை காலங்களில், ஜவுளிக்கடை, துணிக்கடை, எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில், விழுப்புரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, வாலிபர் ஒருவர் சலுான் கடையில் சலுகை விலையில் சிகை அலங்காரம் செய்வதாக அறிவித்து நகரில் போஸ்டர்கள் ஒட்டிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் அடுத்த பை.சேத்துார் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சதீஷ், 26; சிகை அலங்காரம் செய்பவர். விழுப்புரம், எல்லீஸ்சத்திரம் சாலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சலுான் கடை நடத்தி வருகிறார்.
இவர், பொங்கல் பண்டிகையையொட்டி, நேற்று 16ம் தேதி ஒருநாள் மட்டும், வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் 10 ரூபாய்க்கு முடி வெட்டுவதாக அறிவித்து, நகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் மூலம் விளம்பரம் செய்திருந்தார்.
ஆனால், நேற்று சதீஷ் கடையை திறக்கவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் பலர் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டபோது, அவர்களுக்கு பதில் கூற முடியாமல் தவித்தார். அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'தொழிலை மேலும் உயர்த்திச் செல்லவும், அதிக பணம் இல்லாதோருக்கு ஒருநாள் உதவுவதற்காக சலுகை விலையை அறிவித்தேன். இதையறிந்து, இந்த தொழிலில் உள்ள சிலர், நேற்று முன்தினமே, மற்றவர்களின் தொழில் பாதிக்கும் என என்னை மிரட்டினர். அதனால், எதற்கு வம்பு என கடையை திறக்காமல் மூடி விட்டேன்' என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X