பொது செய்தி

தமிழ்நாடு

கைவிடப்பட்ட ரயில்வே குடியிருப்பு புத்துயிர் பெறுகிறது! பொங்கலுக்கு பளிச்சிடுவதால் மகிழ்வு

Added : ஜன 16, 2020
Advertisement
 கைவிடப்பட்ட ரயில்வே குடியிருப்பு  புத்துயிர் பெறுகிறது! பொங்கலுக்கு பளிச்சிடுவதால் மகிழ்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே குடியிருப்பின் குறிப்பிட்ட பகுதிகள், பொங்கல் பண்டிகையையொட்டி புது வர்ணம் பூசப்பட்டு, பளிச்சிடும் தோற்றம் பெற்றுள்ளது.பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு பின்பக்கம், ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. மொத்தம், 109 வீடுகள் உள்ள இந்த குடியிருப்பில், அனைத்து வசதிகளும் இருந்தது.
ஆற்றில் இருந்து நேரடியாக தனி குடிநீர் இணைப்பு, வளாகத்தினுள் தனி ரயில்வே மருத்துவமனை, தெருவிளக்குகள், அழகிய பூந்தோட்டங்கள், ரோடு வசதிகள் இருந்தது.பொள்ளாச்சி மதுரை கோட்டத்தில் இருந்து பாலக்காடு கோட்டத்துக்கு கைமாறிய பின், கொஞ்சம் கொஞ்சமாக பொலிவிழந்தது. குறிப்பாக, அகல ரயில் பாதை பணிகள் துவங்கிய பின், ரயில்கள் நிறுத்தப்பட்டன. அப்போது, ஊழியர்களுக்கு வேலை இல்லாததால், இடமாற்றம் செய்யப்பட்டனர்.ரயில்வே குடியிருப்பு ஏறக்குறைய காலியானது. அதன் பின், 10 ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இன்றி, ரோடுகள் சிதைந்தும், வீடுகள் இடிந்தும், புதர்ச்செடிகள் மண்டியும் பயமுறுத்தும் கட்டடங்களாக காட்சியளித்தன. தற்போது ரயில்களின் இயக்கம் ஓரளவு அதிகரித்துள்ள நிலையில், ஊழியர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்கிறது.தற்போது, 11 வீடுகளில் ஊழியர்கள் வசிக்கின்றனர்.தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பொள்ளாச்சி வந்து சென்ற பின், இப்பகுதிக்கு கோட்ட நிர்வாகம் ஓரளவு முக்கியத்துவம் அளிக்க துவங்கியுள்ளது. இதையடுத்து, குடியிருப்புக்குள் உள்ள ரோடுகளை சீரமைக்க நிதி ஓதுக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் குடியிருக்கும் வீடுகள் சீரமைக்கப்பட்டு, பொங்கல் பண்டிகைக்காக புது வர்ணம் பூசப்பட்டு, பளிச்சிடுகின்றன.
ரயில்வே மருத்துவமனையில், டாக்டர் காலை, 7:00 மணியில் இருந்து மதியம், 1:00 மணி வரை பணியாற்றி, சிகிச்சையளிக்கிறார்.இந்த மாற்றங்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் குடும்பத்தார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதே போல், குடியிருப்பு முழுவதும் உள்ள புதர்களை அகற்றி, சிதைந்து கிடக்கும் வீடுகளை மறுசீரமைத்து, மாற்றுப் பயன்பாட்டுக்காவது அளிக்க வேண்டும் என்பது ரயில்வே ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தாலாட்டும் நினைவுகள்!ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், 'இந்த குடியிருப்பில் பிறந்து, வளர்ந்து பல்வேறு ஊர்களுக்கு சென்றவர்கள் மனதில், பொள்ளாச்சி வாழ்க்கை குறித்த பழைய நினைவுகள் பசுமையாக தங்கியுள்ளன.நினைவுகளை மீட்கவும், பழைய நண்பர்களை திரும்ப சந்திக்கவும் ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து, ஒருவருக்கொருவர் சந்தித்து மகிழும் வகையில், சந்திப்பு நிகழ்ச்சி நடத்த, திட்டமிட்டு வருகிறோம். முதல் கட்டமாக, வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி, ஒவ்வொருவராக இணைத்து வருகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X