அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின் திட்டங்களுக்கான நிதி நிறுத்தக் கூடாது: ராமதாஸ்

Added : ஜன 16, 2020
Advertisement
மின் திட்டங்களுக்கான நிதி நிறுத்தக் கூடாது: ராமதாஸ்

சென்னை :'மின் திட்டங்களுக்கான நிதியுதவியை, மத்திய அரசு நிறுத்தக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:தமிழ்நாடு மின்சார வாரியம் மீள முடியாத கடன் சுமையில், சிக்கித் தவிக்கும் நிலையில், அதன் வாயிலாக, செயல்படுத்தப்படும் மின் திட்டங்களுக்கு வழங்கப்படும் கடனுதவியை நிறுத்தப் போவதாக, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.தமிழக மின்சார வாரியம், ஏற்கனவே, ஏராளமான நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், மத்திய அரசின் புதிய நிலைப்பாடு, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மின் உற்பத்தி திறனை அதிகரித்து, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்துவதன் வாயிலாக தான், இழப்பை தவிர்க்க முடியும்.
அதற்கு, அதிக எண்ணிக்கையில், மின் திட்டங்களை செயல்படுத்தினால் மட்டும் தான், இது சாத்தியம். மத்திய மின் நிதி நிறுவனங்களின் உதவி தேவை. கடன் வழங்குவதை நிறுத்தி விட்டால், மின் திட்டங்களை செயல்படுத்த முடியாமல், மின்சார வாரியம் திவாலாகும் நிலைக்கு சென்று விடும். மின் வாரிய நிதி நிலையை மேம்படுத்துவதற்கான உதவிகளையும், மத்திய அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X