அரசியல் செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்.

Added : ஜன 16, 2020
Advertisement

குடியுரிமை திருத்த சட்டம் இடைக்கால தடை கோரி மனு

புதுடில்லி:குடியுரிமை திருத்த சட்டம், கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதற்கு இடைக்கால தடை விதிக்க கோரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், உச்ச நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை குறித்து, தங்கள் நிலைபாட்டை விளக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி, மற்றொரு மனுவும் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
----------------

ரயில் மோதிஐவர் பலி

சமஸ்திபூர்:பீஹார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தின் ஹசன்பூர் சாலையில் உள்ள ரயில்வே கேட்டை, மாட்டு வண்டியில் சென்ற குழுவினர் கடக்க முயன்ற போது, ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மாட்டு வண்டியில் பயணம் செய்த ஐவர் பலியாகினர். மேலும், இருவர் படுகாயம் அடைந்தனர்.
--------------------
'பெமா' வழக்கில் ஜார்ஜ் ஆஜர்

பெங்களூரு:கர்நாடகா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் கே.ஜே.ஜார்ஜ், அமெரிக்காவில் சொத்து வாங்கியதில், அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 'பெமா' எனப்படும் அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்தின் கீழ், அவர் மீது வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு, 'நோட்டீஸ்' அனுப்பியது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், ஜார்ஜ் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.
-----------------
பனிச்சரிவில் வீரர் பலி

ஜம்மு:லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் மாவட்டத்தின் திராஸ் பகுதியில், ராணுவ நிலை மீது, நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில், நான்கு வீரர்கள் சிக்கினர். இதில், ஒரு வீரர் பலியானார். மூவர் காயமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X