பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் சிறப்பு ரயில் கி.கடவில் நின்று சென்றது

Added : ஜன 16, 2020
Advertisement
 ராமேஸ்வரம் சிறப்பு ரயில் கி.கடவில் நின்று சென்றது

கிணத்துக்கடவு:'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், கோவை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் நின்று சென்றது.கோவை - ராமேஸ்வரம் இடையே (எண் 06031) சிறப்பு ரயில், ஜன., 14 மற்றும் 16ம் தேதிகளில் இயக்கப்பட்டது.எதிர்மார்க்கத்தில் ராமேஸ்வரம் - கோவை இடையே, 15ம் தேதியும், இன்று 17ம் தேதியும் இயக்கப்படுகிறது.இந்த இரு சிறப்பு ரயில்கள் கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் வழியாக நிற்காமல் செல்கிறது. இப்பகுதியில் உள்ள மக்கள் ராமேஸ்வரம் செல்ல வேண்டுமானால், 22 கி.மீ., துாரத்தில் உள்ள கோவை ரயில்வே ஸ்டேஷன் அல்லது, 18 கி.மீ., துாரத்தில் உள்ள பொள்ளாச்சி ஸ்டேஷனுக்கும் செல்ல வேண்டும்.இந்த சிறப்பு ரயில் ஒரு நிமிடம் நிறுத்தி சென்றால், இங்குள்ள மக்கள் ராமேஸ்வரம் செல்ல வசதியாக இருக்கும்.இதற்கு, தெற்கு ரயில்வேத்துறையினர் நடவடிக்கை எடுத்து, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் சிறப்பு ரயில் நிறுத்தி இயக்க வேண்டும் என, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று ராமேஸ்வரம் சென்ற சிறப்பு ரயில், காலை, 10.15 மணிக்கு கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது.ராமேஸ்வரம், மானாமதுரை, மதுரை, பழநி செல்லும் பயணிகள், டிக்கெட் எடுத்து ரயிலில் பயணித்தனர். முன்னதாக, ஸ்டேஷனில் நிறுத்தப்பட்ட ரயில் இஞ்ஜின் முன்பாக நின்று, பயணிகள் அனைவரும் போட்டோ எடுத்துக்கொண்டனர்.அதிவிரைவு ரயிலான கோவை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X