பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் முடிந்து திரும்ப சிறப்பு பஸ்கள் இயக்கம்

Added : ஜன 16, 2020
Advertisement

சென்னை :பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு ஊர்களில் இருந்து, சென்னை திரும்பும் வகையில், அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில், 13 ஆயிரத்து, 400 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பல்வேறு ஊர்களில் இருந்து, தினமும் சென்னைக்கு, 2,225 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றோர், சென்னை திரும்பும் வகையில், 16 முதல், 19ம் தேதி வரை, கூடுதலாக, 4,500 சிறப்பு பஸ்களை இயக்க, அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.
இதன்படி, நான்கு நாட்களுக்கும் சேர்த்து, வழக்கமாக இயக்கப்படும், 8,900 பஸ்களுடன், சிறப்பு பஸ்கள், 4,500 பஸ்கள் என, 13 ஆயிரத்து, 400 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், பல்வேறு ஊர்களில் இருந்து, தொழில் நகரங்களான, திருப்பூருக்கு, 1,200 பஸ்களும், கோவைக்கு, 1,525 பஸ்களும், பெங்களூருக்கு இருந்து, 375 பஸ்களும் இயக்கப்படுகின்றன. சென்னையை தவிர்த்து, இதர இடங்களுக்கு, 9,370 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னையை பொறுத்தவரை, சிறப்பு பஸ் நிலையங்களில் இருந்து, மாநகர சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பொங்கல் முடிந்து, பல்வேறு ஊர்களுக்கு திரும்பும் வகையில், அரசு பஸ்களில், 2.48 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் வழியாக, 12 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X