சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி அருகே ஜல்லிக்கட்டு பெண் உட்பட 29 பேர் காயம்

Added : ஜன 16, 2020
Advertisement



திருச்சி,:திருச்சி அருகே சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில், பெண் உட்பட, 19 பேர் காயமடைந்தனர்.
திருச்சி, நவல்பட்டு அருகேயுள்ள சூரியூரில் நேற்று, ஜல்லிக்கட்டு நடந்தது. நேற்று காலை, 8:45 மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 610 காளைகள் பங்கேற்றன. 334 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உள்பட, 29 பேர் காயமடைந்தனர்.
இதில், 21 பேர் முதலுதவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். மீதியுள்ள, 8 பேர், திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதில் ஜோதிலட்சுமி, 50, என்ற பெண் பார்வையாளரும் அடங்குவார்.
மாலை, 3 மணி வரை நடந்த ஜல்லிக்கட்டில், அதிக காளைகளை அடக்கிய வீரப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசை அயன்புத்துாரைச் சேர்ந்த பிரகாஷ் பெற்றார். இவருக்கு பிரிஜ் பரிசாக அளிக்கப்பட்டது. மேலும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்கள், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

புதுகை அருகே 17 பேர் காயம்
பொங்கல் பண்டிகை முதல், மே, 31ம் தேதி வரை, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில், 120 ஜல்லிக்கட்டுகள் நடக்க உள்ளன. முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை, ரெகுநாதபுரத்தில் நேற்று காலை, 8:30 மணிக்கு துவங்கியது.
இதில், 470 காளைகள் பங்கேற்றன. 220 மாடுபிடி வீரர்கள், காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில், 17 வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
ஜல்லிக்கட்டில் காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X