பொது செய்தி

தமிழ்நாடு

வாங்கிட்டீங்களா? வாகன ஓட்டிகளுக்கான ,'பாஸ்டேக்' ஸ்டிக்கர்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (12)
Advertisement
வாங்கிட்டீங்களா? வாகன ஓட்டிகளுக்கான ,'பாஸ்டேக்' ஸ்டிக்கர்

சென்னை:பொங்கல் பண்டிகை பயணத்தின் போது, 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் ஒட்டாமல் சென்ற வாகன ஓட்டிகள், நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை உட்பட, மாநிலம் முழுதும் உள்ள சுங்கச் சாவடிகளில், 'க்யூ' கட்டி நின்றபோது தான், பலருக்கு ஞானோதயம் வந்தது. தங்கள் வாகனங்களில், பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவதன் பயன்களை, அவர்கள் உணரத் துவங்கியுள்ளனர்.

தமிழகத்தில், 5,000 கி.மீ.,க்கு மேல், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம், கட்டணம் வசூலிப்பதற்காக, 46 இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு, வாகனங்கள் காத்திருப்பதால், கால தாமதம் ஏற்படுகிறது.


சரக்கு வாகனம்

சரக்கு வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எரிபொருள் அதிகளவில் வீணாகிறது. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில், சுங்கச் சாவடிகளை கடக்க, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு, வாகன ஓட்டிகள் மற்றும் பஸ் பயணியர் தள்ளப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், 'பாஸ்டேக்' நடைமுறை, 2019 டிசம்பர், 1ல் நடைமுறைக்கு வரும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.

ஆனால், இதற்கான, 'எலக்ட்ரானிக் சென்சார்' கருவிகளை, சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் கொள்முதல் செய்யாமல் இருந்தன. இவற்றை கையாள்வதற்கு, ஊழியர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப்படவில்லை. இதனால், டிச., 15ம் தேதி வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக, சரக்கு வாகன உரிமையாளர்கள் மட்டும் போட்டி போட்டு, 'பாஸ்டேக்' அட்டைகளை வாங்கினர்.

சொந்த கார் வைத்துள்ளவர்கள் மட்டுமின்றி, பஸ், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களை வைத்துள்ளவர்கள், அவற்றை வாங்க ஆர்வம் காட்டவில்லை.எனவே, தமிழகத்தில் இதுவரை, 50 சதவீத வாகன உரிமையாளர்கள் மட்டுமே, 'பாஸ்டேக்' வாங்கி உள்ளனர்.


தனி வழி

வேறு வழியின்றி, 'பாஸ்டேக்' இல்லாத வாகனங்களிடம், கட்டணம் வசூலிப்பதற்காக, சுங்கச் சாவடிகளில் தனி வழி ஏற்படுத்தப்பட்டது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள், ஜன., 15ம் தேதிக்கு பின் அனுமதிக்கப்படாது எனவும், எச்சரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் துவங்கியது. இதை ஒட்டி, 13ம் தேதி, ஏராளமான வாகனங்கள் சுங்க சாவடிகளை கடந்து சென்றன. சென்னையில் அலுவல் மற்றும் தொழில் காரணமாக வசிப்பவர்கள், தங்கள் சொந்த கார்களில் மட்டுமின்றி, தனியார் பஸ்கள், வாடகை வானங்களிலும், சொந்த ஊர்களுக்கு சென்றனர். 'பாஸ்டேக்' ஒட்டிய வாகனங்கள், எந்தவித பிரச்னையும் இல்லாமல், சுங்கச் சாவடி களை நொடிப் பொழுதில் கடந்து சென்றன.

மற்ற வாகனங்கள், பணம் செலுத்தும் வழிகளில் அணிவகுத்து நின்றன. இதனால், வழக்கம் போல, குறித்த நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பலரும் அவதிப்பட்டனர். 'பாஸ்டேக் வாங்கி இருந்தால், இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்காதே...' என, பலரும் புலம்பியதை, அன்று கேட்க முடிந்தது. தொடர்ந்து, 14, 15ம் தேதிகளிலும், இதே நிலை நீடித்ததால், வாகன ஓட்டிகளுக்கு ஞானோதயம் ஏற்பட்டுள்ளது; பாஸ்டேக் திட்டத்தின் பயனை, உணரத் துவங்கியுள்ளனர்.பாஸ்டேக் ஸ்டிக்கர்களை, வங்கிகள், தனியார் நிறுவனங்கள்,'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்கள் வாயிலாக வாங்கும் முயற்சியில், பலரும் இறங்கியுள்ளனர்.


* கட்டணம் வசூலிப்பது எப்படி?பாஸ்டேக் ஸ்டிக்கர்களை, உரிய ஆவணங்களை செலுத்தி, வாகன ஓட்டிகள் பெறலாம். இந்த ஸ்டிக்கரை, தங்களது வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்ட வேண்டும். சுங்கச் சாவடியை கடக்கும்போது, அங்குள்ள சென்சார் கருவி வாயிலாக, அந்த வாகனத்திற்கு, அந்த சாலைக்கான சுங்கக் கட்டணம் மட்டும், தானாகவே எடுத்துக் கொள்ளப்படும். 'மொபைல் போன் ரீசார்ஜ்' போன்று, இந்த பாஸ்டேக் கணக்கிலும் தேவைக்கேற்ப பணத்தை, ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். வங்கிக் கணக்கில் இருந்து, பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.


* தொழில்நுட்ப கோளாறு சரியாகுமா?

பல சுங்கச் சாவடிகளில் நெரிசலை கட்டுப்படுத்த, பாஸ்டேக் வழிகளில், மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால், பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நடவடிக்கையில் ஈடுபடும் சுங்கச் சாவடி நிர்வாகங்கள் மீது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

பாஸ்டேக் ஸ்டிக்கரை, 'ஸ்கேன்' செய்து, கட்டணத்தை பிடித்தம் செய்யும், எலக்ட்ரானிக் சென்சார் கருவிகள், பல இடங்களில் முறையாகச் செயல்படவில்லை. இதனால், ஒரு முறை கடந்து செல்லும் சுங்கச் சாவடிகளில் இருந்து, இரண்டு முறை பயணித்ததற்கான கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, ஏராளமான புகார்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும், சுங்கச் சாவடி நிர்வாகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்வதற்கு, முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணைய தமிழகப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


* எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆர்வமில்லை!தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு, சட்டசபை செயலகம் வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும், தங்களது கார்களில் ஒட்டுவதற்கு, ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகின்றன. ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு, ஒரு ஸ்டிக்கர் மட்டுமே கிடைக்கும். இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்களுக்கு, சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. ஆனால், ஸ்டிக்கர்களை, 'கலர் ஸ்கேன்' செய்து, தங்களது மற்ற கார்களிலும், உறவினர்கள், நண்பர்கள், கட்சி நிர்வாகிகள் கார்களிலும், எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டியுள்ளனர்.

இதனால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதுடன், சுங்கச் சாவடிகளின் வருவாயும் குறைகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட மிட்டது. சமீபத்தில், சட்டசபையில் கவர்னர் உரை மீது விவாதம் நடந்தது. அப்போது, பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம், சென்னை, தலைமை செயலக வளாகத்தில், இரண்டு நாட்கள் நடந்தது.

மொத்தம், 234 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள நிலையில், 50 பேர் கூட, இதற்கான விண்ணப்பத்தை வழங்கவில்லை. சட்டசபை செயலக அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமே, இந்த முகாமை பயன்படுத்தினர். சுங்கச் சாவடிகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கவே, எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வம் காட்டுவது, இதன் வாயிலாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
17-ஜன-202022:15:26 IST Report Abuse
Viswanathan "தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு, சட்டசபை செயலகம் வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும், தங்களது கார்களில் ஒட்டுவதற்கு, ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகின்றன. ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு, ஒரு ஸ்டிக்கர் மட்டுமே கிடைக்கும். இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்களுக்கு, சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. ஆனால், ஸ்டிக்கர்களை, 'கலர் ஸ்கேன்' செய்து, தங்களது மற்ற கார்களிலும், உறவினர்கள், நண்பர்கள், கட்சி நிர்வாகிகள் கார்களிலும், எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டியுள்ளனர்." நியாயமாக MLA வண்டிகளுக்கு மும்மடங்கு வசூல் செய்ய வேண்டும் . ஒரிஜினல் ஸ்டிக்கர் ஸ்கேன் செய்து ஓடினாலும் copy எடுக்கப்பட்ட ஸ்டிக்கர் சென்ஸ் ஆகாதவாறு ஸ்டிக்கர்களை வழங்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
17-ஜன-202015:26:30 IST Report Abuse
முதல் தமிழன் வரி கொள்ளையர்கள் ஆளும் நாடு நம்ம நாடு....
Rate this:
Share this comment
Dubuk U - Chennai,இந்தியா
17-ஜன-202022:01:10 IST Report Abuse
Dubuk Uமத்த நாட்டுல எல்லாம் இல்லவே இல்லை...
Rate this:
Share this comment
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
18-ஜன-202012:04:49 IST Report Abuse
முதல் தமிழன்நிறைய நாட்டுல இல்லை. பணக்கார வேஷம் போடுற நாட்டுல மட்டும்தான் இருக்கு..அதுவும் நம்ம நாட்டுல வேற லெவல் கொள்ளை மத்திய அரசு அடிக்குது......
Rate this:
Share this comment
Cancel
Narayanan Sklaxmi - chennai,இந்தியா
17-ஜன-202008:51:56 IST Report Abuse
Narayanan Sklaxmi எங்கள் பேங்குக்கு டேக் வந்தபாடில்லை ஒரு மாதமாக தூங்குகிறது எல்லாம் மயமாஹா இருக்கிறது
Rate this:
Share this comment
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
17-ஜன-202016:12:51 IST Report Abuse
ஆனந்த் கடைசி தருணம் வரைதூங்கிவிட்டு... இப்போது வங்கி தூங்குகிறதாம்...
Rate this:
Share this comment
Dubuk U - Chennai,இந்தியா
17-ஜன-202022:02:54 IST Report Abuse
Dubuk Uமிக சரி, நான் கடந்த 5 ஆண்டுகளாக பயன்படுத்துகிறேன், பல நேரங்களில் கிருஷ்ணகிரி , அத்திப்பள்ளி மிக விரைவாக கடந்திருக்கிறேன்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X