பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டு நீர் பாசனத்தில் மரவள்ளி சாகுபடி: ஆதாயம் கிடைக்குமென நம்பிக்கை

Added : ஜன 16, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வடசித்துார் அருகே, சின்னதோட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல். தொழிற்சாலை ஒன்றில் சி.என்.சி., ஆப்ரேட்டாக பணியாற்றுகிறார்; விவசாயத்திலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்.நான்கு ஏக்கரில், ஏழு ஆண்டுகளுக்கு முன் தென்னை சாகுபடி மேற்கொண்டிருந்தார். மழையில்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டபோது, தென்னைகள் அனைத்தும் அழிந்தன. ஏழு ஆண்டுகள் நிலத்தில் சாகுபடி ஏதும் செய்யவில்லை.கடந்த ஆண்டு மழை பெய்ததால், பாசன கிணறு நிறைந்துள்ளது. இதனால், நான்கு ஏக்கரில் ஒரு ஏக்கர் நிலத்தை, தொழு உரமிட்டு உழுது, விதைப்புக்கு தயார் செய்தார். விவசாயி சக்திவேல் கூறியதாவது: கடும் வறட்சிக்கு பின், சமீபத்தில் பெய்த பருவமழையால், கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு பின், உழுது விதைப்புக்கு தயார்படுத்தினேன்.இப்பகுதியில், இதுவரை யாரும் சாகுபடி மேற்கொள்ளாத, 10 மாத பயிரான, நாட்டுரக மரவள்ளி குச்சிகளை, இரண்டரை அடிக்கு ஒன்று என, நடவு செய்து சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டது.அனைத்து குச்சிகளும் துளிர்த்துள்ளது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை, இரண்டு மணி நேரம் நீர் வினியோகம் செய்யப்படுகிறது.கிழங்கு உருவானதும், தினமும் நீர் பாசனம் தர வேண்டும். அதேபோல, நோய் மற்றும் பூச்சி தாக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மூன்று மாதத்துக்கு ஒருமுறை தடுப்பு மருந்து, சொட்டு நீர் பாசனம் வழியாக வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மரவள்ளியில், கூடுதல் ஆதாயம் கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளோம்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X