பொது செய்தி

தமிழ்நாடு

மாறி வருகிறது வானிலை: நெல் விவசாயிகள் கவனம்

Added : ஜன 16, 2020
Advertisement

ஆனைமலை:கோவை மாவட்டம் முழுவதிலும், மாறி வரும் வானிலைக்கு நெல் பயிரை காக்க, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.கோவை வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:இன்று, 17ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் குறைந்தபட்சமாக, 20 டிகிரி முதல் அதிகபட்சமாக, 32 டிகிரி வரையில் வெப்பநிலை இருக்கும். குறைந்தபட்சமாக, 45 சதவீதம் முதல் அதிகபட்சமாக, 90 சதவீதம் வரையில் காற்றில் ஈரப்பதம் இருக்கும். குளிர்ந்த, வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து பயிர்களுக்கும், மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து நீர் பாசனம் செய்ய வேண்டும். குறைந்த வெப்பநிலையால் நெல்லில் துத்தநாக சத்து குறைபாடு ஏற்படும். இதை தவிர்க்க, 0.5 சதவீதம் 'துத்தநாக சல்பேட்டுடன்', ஒரு சதவீதம் யூரியாவை கலந்து தெளிக்க வேண்டும். பத்து நாட்கள் இடைவெளியில் மீண்டும் இக்கரைசலை தெளிக்கவும். அதேபோல், தற்போதைய வானிலையால் நெல்லில் இலைப்புள்ளி நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயலை அடிக்கடி கண்காணித்து, இலைப்புள்ளி நோய் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்.கடந்த, 20 நாட்களாக வறண்ட வானிலை நிலவுவதால், பயிர்களில் பச்சையம் குறைய வாய்ப்பு உள்ளது. பச்சையம் குறையாமல் பார்த்துக்கொள்ள, ஏக்கருக்கு, 200 மில்லி 'மெத்தைலோ பாக்டீரியா', 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.இவ்வாறு, அறிக்கையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X