பொது செய்தி

தமிழ்நாடு

மார்கழி பஜனை நிறைவு

Added : ஜன 16, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், உலக நல வேள்விக் குழுவினர், மார்கழி கடைசி நாள் பஜனை ஊர்வலம் நடத்தினர்.ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதிலும், கடும் குளிரிலும் அதிகாலையில் எழுந்து, திருப்பாவை, திருவெம்பாவை பாடி, இறைவனை வழிபடுவது வழக்கம். அதேபோல், கோவில்களில் சிறப்பு பூஜைகள், பஜனை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.மார்கழி துவங்கியதில் இருந்து, உலகநல வேள்விக்குழு, நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் மற்றும் மக்கள் இணைந்து, ஆனைமலை, கோட்டூர், பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், திருப்பாவை, திருவெம்பாவை பாடியும், பக்திப்பாடல்கள் பாடியும் ஊர்வலம் நடத்தி வந்தனர்.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில், இசைக் கருவிகளுடன் வீதிகளில், பக்திப்பாடல்கள் பாடிக்கொண்டு ஊர்வலம் சென்று, மார்கழி பஜனையை நேற்று நிறைவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X