பா.ஜ., தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா : 20ல் பிரதமர் முன்னிலையில் பொறுப்பேற்பு

Added : ஜன 16, 2020
Advertisement

வரும், 20ல், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட மூத்த தலைவர்கள் முன்னிலையில், ஜே.பி. நட்டா, பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவராக ஒருமனதாக தேர்வாகிறார்.நாடு முழுதும், பா.ஜ.,வின், உட்கட்சித் தேர்தல்கள், பல மாதங்களாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கும், புதிய நிர்வாகிகள் தேர்வாகி, அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

அவற்றை முறைப்படுத்தி, தேசிய அளவிலான தலைவர், பொதுச் செயலர் உட்பட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகளை, மூத்த தலைவர் ராதா மோகன்சிங் தலைமையிலான குழு, மேற்பார்வையிட்டு வருகிறது.அதன்படி, தேசிய தலைவர் பதவிக்கு, தற்போதைய செயல் தலைவரான ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.இவர், வரும் 20ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் ஆகியோர் முன்னிலையில், ஒருமனதாக தேர்வாகி, பொறுப்பேற்க உள்ளார்.நட்டாவின் பெயரை, பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில தலைவர்கள் வழிமொழிய உள்ளனர்.இந்நிலையில், அமித் ஷா தலைமையில் பணியாற்றிய பழைய நிர்வாகிகள் நீடிப்பரா அல்லது நட்டா தலைமையில் புதிய குழு உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த, 2014ல், அமித் ஷா தேசிய தலைவராக பொறுப்பேற்ற போது நியமிக்கப்பட்ட நிர்வாகிகள்தான், தற்போதுவரை தொடர்கின்றனர். பா.ஜ.,வில் தலைவர் பதவிக்கு அடுத்தபடியாக, பொதுச்செயலர் பதவிமுக்கியமானது.எனவே, அந்த பதவியில் யார் அமரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு, பா.ஜ.,வுக்குள் காணப்படுகிறது. அதேபோல, பொதுச்செயலர்கள் பதவிகளும் முக்கியமானவை.அமித் ஷா தலைமையில், புபீந்தர் யாதவ், ராம்மாதவ், விஜய் வர்கியா போன்றவர்கள், பலம்வாய்ந்த பொதுச்செயலர்களாக வலம் வந்தனர்.

இவர்களை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. எனவே, சில மாதங்கள் கழித்தே, நட்டா தலைமையிலான புதிய குழு உருவாக்கப்படும். தவிர, செய்தி தொடர்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளனர். அதேபோல, துணைத் தலைவர் பதவிகளிலும், தேசிய செயலர் பதவிகளிலும், உடனடியாக மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.உ.பி., மாநில அமைச்சர் வருகைதமிழக தலைவர் இன்று அறிவிப்பா?தேசிய தலைவர் பொறுப்பேற்கும் தேதி உறுதியாகியுள்ளதால், மாநிலத் தலைவர்களின் நியமனமும், முடிவு செய்யப்பட வேண்டும். அதன்படி, தமிழக பா.ஜ.,வுக்கு, புதிய தலைவர்நியமனம் செய்தாக வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.இந்நிலையில், உ.பி., மாநில அமைச்சர் சித்தார்த்நாத் சிங், இன்று சென்னை வரவுள்ளார். இதை அடிப்படையாக வைத்து, 'புதிய தலைவர் யார் என்பதை அறிவிக்க, தலைமை அளித்துள்ள கடிதத்தை எடுத்துக் கொண்டு, மேலிட பிரதிநிதியாக சித்தார்த்நாத் வருகிறார்' என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால், 'தமிழக பா.ஜ., தலைவர் நியமனத்தில் ஒருமித்த முடிவு எட்டப்படாததால், இம்மாநில நியமனம் மட்டும், மேலும் சில நாட்களுக்கு தள்ளிப்போகும்' என, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X