பொது செய்தி

தமிழ்நாடு

'டிஷ்யூம் டிஷ்யூம்'! ஊரக வளர்ச்சி, பொதுப்பணி துறையிடையே... அனுமதி இல்லாமல் கட்டப்படும் தடுப்பணையால் சிக்கல்

Added : ஜன 16, 2020
Advertisement
 'டிஷ்யூம் டிஷ்யூம்'! ஊரக வளர்ச்சி, பொதுப்பணி துறையிடையே... அனுமதி இல்லாமல் கட்டப்படும் தடுப்பணையால் சிக்கல்

பொதுப்பணித் துறை ஏரியின் வரத்து கால்வாயில், ஊரக வளர்ச்சி துறையினர் அனுமதி பெறாமல் தடுப்பணை கட்டுவதால், இரண்டு துறையினரிடையே வாக்குவாதம் மற்றும் பிரச்னை எழுந்துள்ளது.
தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகள் மாவட்டமாக, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் இருந்தது. மாவட்டம் முழுவதும், 900க்கும் மேற்பட்ட ஏரிகள், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வந்தது.வாக்குவாதம்இந்நிலையில், மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குள், 500க்கும் மேற்பட்ட ஏரிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 300க்கும் மேற்பட்ட ஏரிகளும் உள்ளன.இந்நிலையில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு, மேலும் பல சோதனைகள், ஊரக வளர்ச்சி துறையால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், ஊரக வளர்ச்சி துறையின் திட்டங்களின் கீழ், ஏரி கால்வாய்களில் தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது.இந்த கால்வாய் தடுப்பணைகள், ஏரியின் வரத்து கால்வாய்களில் கட்டப்படுவதாகவும், இதனால், ஏரிக்கு நீர்வரத்து வராமல், மழைக் காலங்களில் சிக்கல் ஏற்படும் எனவும், புகார் எழுந்துள்ளது.
பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரியின் கால்வாய்களில், பொதுப்பணித் துறையிடம் அனுமதி பெறாமல், ஊரக வளர்ச்சி துறையினர், கால்வாய்களில் தடுப்பணை கட்டுவதால், இரண்டு துறையினர் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்படுகிறது.ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள மகாதேவி மங்கலம் ஏரியில், வரத்து கால்வாயில், ஊரக வளர்ச்சி துறையினர் தடுப்பணை கட்டியதால், இரண்டு துறையினருக்கும் இடையே கடும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஆட்சேபனை
தடுப்பணை கட்டும் பணிகளை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் நிறுத்தியதாக கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள மகாதேவி மங்கலத்தில் மட்டுமல்லாமல், ஏகனாபுரம் மற்றும் தைப்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளிலும், ஊரக வளர்ச்சி துறையினர் முறையான அனுமதி பெறாமல், தடுப்பணை கட்டியுள்ளதாக பொதுப்பணித் துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன் காரணமாக, ஏரிக்கு வரும் நீர்வரத்து தடைபடும் என்கின்றனர்.ஊரக வளர்ச்சி துறையினர் இந்த விஷயத்தில், பொதுப்பணித் துறையினரின் ஆட்சேபனையை கண்டும், காணாமல் பல இடங்களில் கட்டுமான பணியை மேற்கொண்டு வருவதாக விமர்சனம் எழுகிறது.'முறையான அனுமதி பெறாமல், வரத்து கால்வாயில் தடுப்பணை கட்டுவதால், பின்னாளில் கடும் சிக்கல் ஏற்படும். 'ஊரக வளர்ச்சி துறையினர் உயரதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்கள் கேட்பதாக இல்லை' என, பொதுப்பணித் துறையினர் புலம்பி வருகின்றனர்.
-- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X