சி.பி.ஐ., கோர்ட்டில் லாலு பிரசாத் ஆஜர்

Added : ஜன 16, 2020
Advertisement

ராஞ்சி : பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மாட்டு தீவன ஊழல் வழக்குகளில், தண்டனை பெற்று சிறையில் உள்ளார். இந்நிலையில், ௧௩௯ கோடியே, ௩௫ லட்சம் ரூபாயை, கருவூலத்தில் இருந்து மோசடியாக பெற்ற வழக்கில், அவர் நேற்று சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜரானார். பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில முன்னாள் முதல்வர் லாலு, மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, டிச., 2017 முதல், சிறையில் உள்ளார். இந்நிலையில், கடந்த, ௧௯௯௦ல், அவர் முதல்வராக இருந்தபோது, டொரண்டா கருவூலத்தில் இருந்து, ௧௩௯ கோடியே, ௩௫ லட்சம் ரூபாய் எடுத்து மோசடி செய்துள்ளார் என, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, ராஞ்சி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிறையில் இருக்கும் லாலுவை, போலீசார் ஆஜர்படுத்தினர். அவரிடம், சிறப்பு நீதிபதி சுதான்ஷு குமார் சஷி, வழக்கு தொடர்பாக, ௩௪ கேள்விகள் எழுப்பினார். அவற்றுக்கான லாலுவின் பதில்கள், மூன்று மணி நேரம் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில், மேலும், ௧௧௧ பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளனர். சாட்சிகளாக, ௫௭௫ பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். லாலு மீது, மேலும் ஒரு மாட்டு தீவன ஊழல் வழக்கு, பாஹல்பூர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X