பயங்கரவாதத்திற்கு எதிராக ' கடும் நடவடிக்கை தேவை

Added : ஜன 16, 2020
Advertisement

புதுடில்லி: 'பொருளாதார நடவடிக்கை பணிக்குழுவின் கறுப்பு பட்டியலில் இடம் பெறுவதை தவிர்க்க வேண்டுமானால், பாகிஸ்தான், பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரிட்டன் தெரிவித்துள்ளது.

டில்லியில் நடைபெற்று வரும், ரெய்சினா மாநாட்டில், பிரிட்டன் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தின் தெற்காசிய பிராந்தியத்துக்கான இயக்குனர் கேரத் பெய்லி பேசியதாவது: பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு, பல்வேறு பயங்கவாத அமைப்புகள் செயல்பட்டு வருவது, தெளிவாக நிரூபணமாகி உள்ளது. அவர்களால், பாகிஸ்தான் அரசுக்கு மட்டுமின்றி, தெற்காசிய பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த கூட்டத்தில், எப்.ஏ.டி.எப்., எனப்படும், பொருளாதார நடவடிக்கை பணிக் குழுவின், 'கிரே' பட்டியலில், பாக்., சேர்க்கப்பட்டது. பயங்கரவாத செயல்களை ஒழிக்க, அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என, எச்சரிக்கப்பட்டது. அதற்கு, 2020, பிப்ரவரி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை ஒழிக்க, பாக்., அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனினும், அவை இன்னும் தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X