பொது செய்தி

தமிழ்நாடு

கழிவு நீர் கலப்பால் ஏரி நீர் மாசு

Added : ஜன 16, 2020
Share
Advertisement
 கழிவு நீர் கலப்பால் ஏரி நீர் மாசு

திருப்போரூர்:திருப்போரூர், செக்கடித்தாங்கல் ஏரியில், கழிவு நீர் கலந்து, நீர் மாசடைந்து வருகிறது.
திருப்போரூர் பேரூராட்சி, நெம்மேலி செல்லும் சாலையை ஒட்டி, செக்கடித்தாங்கல் ஏரி உள்ளது. இதில், இரண்டு பிரதான மதகுகள் மற்றும் மூன்று நீர் பாசன கால்வாய்கள் உள்ளன. இவற்றின் மூலம், 200 ஏக்கருக்கு மேல், விவசாயம் செய்யப்படுகிறது.ஏரியின் மேற்கு புறத்தில் உள்ள குடியிருப்பு வீடுகளால், ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு, ஏரியின் அளவு சுருங்கி வருகிறது.மேலும், ஏரியை ஒட்டியுள்ள வீடுகள், கிழக்கு மாடவீதிகளில் உள்ள வடிகால்வாய் வழியாக, ஏரியில் கழிவு நீர் விடப்படுகிறது. இதனால், ஏரியின் நீர் தன்மை பாதிக்கப்படுவதுடன், நீர்வள ஆதாரமும் குறைகிறது.எனவே, ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X