பொது செய்தி

தமிழ்நாடு

விடுமுறையில் நாய் கடிக்கு தடுப்பூசி போடுவதில்லை

Added : ஜன 16, 2020
Share
Advertisement

வாலாஜாபாத்:பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், விடுமுறை நாட்களில், நாய் கடிக்கு, தடுப்பூசி போடுவதில்லை என, நோயாளிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியத்தில், பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, பரந்துார், தண்டலம், மேல்பொடவூர், சிறுவாக்கம், கொட்டவாக்கம், புரிசை, புள்ளலுார், வளத்துார் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில், நாய் கடியால் பாதிக்கப்பட்டவருக்கு, தடுப்பூசி போடுவதில்லை. அதற்கு பதிலாக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர்.
இது குறித்து, நாய் கடியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறியதாவது:விடுமுறை நாட்களில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர் வருவதில்லை. நாய் கடிக்கு தடுப்பூசி போடுவதற்கு, மருத்துவர் பரிந்துரை செய்யாமல், செவிலியர்கள் தடுப்பூசி போட மறுக்கின்றனர்.இதனால், வேறு வழியின்றி காஞ்சிபுரம் சென்று தடுப்பூசி போட வேண்டியுள்ளது. விடுமுறை நாட்களிலும், மருத்துவர் இருக்கும்படி சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X