அரசு உத்தரவுக்கு அவ்ளோதான் மரியாதை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு உத்தரவுக்கு அவ்ளோதான் மரியாதை!

Added : ஜன 16, 2020
 அரசு உத்தரவுக்கு அவ்ளோதான் மரியாதை!

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் திருவள்ளுவர் தினத்தன்றும் மது, இறைச்சி விற்பனை அமோகமாக நடந்தது.உலகப் பொதுமறையான திருக்குறளை அளித்த திருவள்ளுவரை போற்றும் விதமாக, தை, 2ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று, மதுக்கடைகளும், ஆடு, மாடு, கோழி வதை செய்ய தடை விதித்து, இறைச்சி விற்பனை கடைகளும் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது.அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை, கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டிய கடமை, அரசு அதிகாரிகளுக்கு உள்ளது.திருவள்ளுவர் தினமான நேற்று, பொள்ளாச்சியில் மது விற்கும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டாலும், 'பார்'களில், குவார்ட்டர், 50 முதல், 70 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு அப்பட்டமாக விற்கப்பட்டன.மேலும், காந்தி மார்க்கெட், நேதாஜி உள்ளிட்ட பகுதிகளில், பெரும்பாலான ஆடு இறைச்சி, கோழி இறைச்சி கடைகள் செயல்பட்டன.இதை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என்பதால், வியாபாரிகள், பார் உரிமையாளர்கள் அரசு உத்தரவை எவ்வித தயக்கமும்மின்றி மீறினர்.டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட்டாலும், ஆளுங்கட்சி பிரமுகர்களால் நடத்தப்படும் 'பார்'களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடக்கிறது. இதில், போலீசாருக்கும் மாமூல் செல்வதால், சட்டவிரோத மது விற்பனை மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X