சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழவராயனேந்தலில் போலீஸ் காரால் சர்ச்சை; ஏலம் எடுத்த இன்ஸ்பெக்டர் புலம்பல்

Added : ஜன 16, 2020
Advertisement

சிவகங்கை : திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தலில் போலீஸ் வாகனத்தின் மீது அமர்ந்து இளைஞர்கள் புகை பிடித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

மழவராயனேந்தலில், நேற்று காலை 11:00 மணிக்கு 'போலீஸ்' என ஸ்டிக்கர் ஒட்டியிருந்த காரில், இளைஞர்கள் சென்றனர். ஊருக்குள் காரை நிறுத்தி, அதன் மீது அமர்ந்து புகை பிடித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் தங்களை ஒரு போலீஸ் போல் காட்டியுள்ளனர். சந்தேகமுற்ற கிராமத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். திருப்பாச்சேத்தி எஸ்.ஐ., ஜெயகஜேந்திரன் தலைமையில் சென்ற போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அந்த காரை ஒரு இன்ஸ்பெக்டர் ஏலம் எடுத்து சொந்தமாக ஓட்டி வந்துள்ளார்.

பொங்கல் விழாவிற்காக அங்கு சென்றபோது, காரில் வந்தவர்கள் இது போன்று நடந்து கொண்டதால் சர்ச்சை ஏற்பட்டது. மேலும், ஏலம் எடுத்த வாகனத்தில் இருந்த போலீஸ் ஸ்டிக்கரை அகற்றாமலும், வண்டி எண்ணில் அரசு வாகனத்தை குறிப்பிடும் 'ஜி' என்ற வார்த்தையை அகற்றாமல் ஓட்டியதால் கிராமத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டு, போலீசுக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது. அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால், ஏலம் எடுத்த இன்ஸ்பெக்டர் புலம்பி தவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X