பொது செய்தி

தமிழ்நாடு

அழகப்பா பல்கலை கல்லுாரியில் அனுமதியின்றி சவடு மணல் எடுப்பு

Added : ஜன 16, 2020
Advertisement
 அழகப்பா பல்கலை கல்லுாரியில் அனுமதியின்றி சவடு மணல் எடுப்பு

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்விகல்லுாரி வளாகத்தில் அனுமதியின்றி சவடு மணல் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்விகல்லுாரியில், ரூசோ திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில், உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறைகட்டுப்பாட்டின் கீழ் ஒப்பந்தகாரர் மூலம் கட்டடம் கட்டப்படுகிறது.கட்டடத்தின் தரை தளம் நிரப்ப சவடுமணல் தேவைப்பட்டுள்ளது. தற்போது, சவடுமணல் எடுக்க சிவகங்கைமாவட்டத்தில் தடை உள்ளதால் சவடுமணல் கிடைப்பதில் சிக்கல்நிலவுகிறது. இதனால், உடற்கல்வி கல்லுாரி கால்பந்தாட்ட மைதானத்தின் அருகே சவடு மணல் அள்ளப்பட்டுபுதிய கட்டடம் அமைக்கும் இடத்தில் கொட்டப்பட்டுள்ளது. நுாறு லோடு வரை மணல்அள்ளப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

துணைவேந்தர் ராஜேந்திரன் கூறுகையில்; பொதுப்பணித்துறை சார்பில், உடற்பயிற்சி கூடம் கட்டப்படுகிறது. சவடுமணல் பிரச்னை குறித்து எனக்கும் தகவல் வந்தது. மணல் கிடைக்காததால் மணல் எடுத்ததாக ஒப்பந்தகாரர் தெரிவித்தார்.அதற்குரிய பணத்தையும் கட்டி விடுவதாக தெரிவித்தனர்.மணல் வெளியே எடுத்துச் செல்லப்படவில்லை,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X