சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுப்பட்டி சாலையோர பள்ளத்தால் விபத்து

Added : ஜன 16, 2020
Advertisement

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே ஈழுவாண்டிப்பட்டி, புதுப்பட்டி இடையே சாலையோரத்தில் பள்ளம் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது.

இச்சாலையில் பல்வேறு இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன. இச்சாலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தற்போது சாலையின் பக்கவாட்டில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் பல இடங்களில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக சூரக்குடி, முறையூர், செம்மினிப்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு செல்லலாம்.

இச்சாலையின் பல இடங்களில் இதே போன்று பள்ளங்கள் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட ஊரை சென்றடைய முடிய வில்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற இடங்களில் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விடும் போது வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X