பொது செய்தி

தமிழ்நாடு

பாசி படர்ந்த வைகை ஆற்று தண்ணீர்

Added : ஜன 16, 2020
Advertisement

திருப்புவனம் : திருப்புவனம் பகுதி வைகை ஆற்று நீர் பச்சைப் பசேல் என பாசி படர்ந்து இருப்பதால் நீராடும் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.

வைகை ஆறு திருப்புவனம் வழியாக செல்கிறது. மறைந்த முன்னோர்களுக்கு திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் கொடுக்க வருபவர்கள் இங்கு நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது. திருப்புவனத்தில் அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளுக்காக தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. சமீபத்தில் வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் ஆற்றில் நீரோட்டம் உள்ள நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. வைகை ஆற்றில் தண்ணீர் வராத நிலையில் மதுரை மாவட்ட கழிவு நீர் முழுவதும் வைகையில் கலந்து திருப்புவனம் தடுப்பணையில் நிரம்பி துர்நாற்றம் வீசி வருகிறது. சாக்கடை நீர் நிரம்பிஉள்ளதால் தடுப்பணையில் உள்ள தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்து பச்சை நிறத்தில் மாறியுள்ளது. திதி, தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்கள் இத்தண்ணீரில் நீராடிய பின் உடல்நிலை பாதிக்கப்படும் நிலை உள்ளது.

தடுப்பணையில் கழிவு நீர் நிரம்பி இருப்பதால் தடுப்பணையை ஒட்டியுள்ள திருப்புவனம், அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளிலும் கழிவு நீர் கலந்து வருகிறது. திருப்புவனத்தில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவதில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விபரீதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் பாசி படர்ந்துள்ள கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X