பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவ பொங்கல்

Added : ஜன 16, 2020
Advertisement

சிவகங்கை : சிவகங்கையில் கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமை வகித்தார். நல்லாசிரியர் கண்ணப்பன் வரவேற்றார். சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் லுார்துராஜா, இயக்குனர் பேரரசு, மாவட்ட தலைவர் மாரி, செயலாளர் முருகன், பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கற்பூரசுந்தரபாண்டியன், தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி சிறப்புரை ஆற்றினர். சிறந்த சாதனையாளர்களுக்கு சான்று, கேடயம், விருது வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம் மற்றும் புதுக்கோட்டை செந்தில்கணேஷ்- ராஜலட்சுமியினர் பாரம்பரிய பாடல் பாடினர். கலை இலக்கிய மன்ற கிளை செயலாளர் இந்திராகாந்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X