பொது செய்தி

இந்தியா

கைவிரிப்பு!'நிர்பயா' குற்றவாளிக்கு தள்ளிப்போனது, 'தூக்கு'

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
கைவிரிப்பு!'நிர்பயா' குற்றவாளிக்கு தள்ளிப்போனது, 'தூக்கு'

புதுடில்லி:'மருத்துவ மாணவி, 'நிர்பயா' வழக்கின் குற்றவாளி, முகேஷ் குமார் தாக்கல் செய்த கருணை மனுவை, ஜனாதிபதி நிராகரிக்காத வரை, துாக்கில் போட முடியாது' என, டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012 டிசம்பரில், ஆறு பேர் அடங்கிய கும்பலால், ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வெளியே துாக்கி வீசப்பட்டுஉயிரிழந்தார்.


கருணை மனு மீது ஜனாதிபதி இறுதி முடிவெடுக்கும் வரை குற்றவாளிகளை தூக்கிலிட முடியாது என, டில்லி திஸ் ஹசாரி கோர்ட்டில் திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். கருணை மனு நிலுவையில் இருந்தால், தூக்கிலிட தடை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஓரிரு நாளுக்குள் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தால்கூட, 22-ம்தேதி தூக்கிலிட முடியாது.

'நோட்டீஸ்'இது தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன், 'மைனர்' என்பதால், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்டான். மற்றவர்களுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. அவர்களில், ராம் சிங் என்பவர், திகார் சிறையில் தற்கொலை செய்தார். எஞ்சிய நான்கு பேருக்கான துாக்கு தண்டனையை, 2017ல், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.இதை எதிர்த்து நான்கு பேரும் தாக்கல் செய்த சீராய்வு மனு, 2018ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, நான்கு பேருக்கும், வரும், 22ம் தேதி அதிகாலை, 7:00 மணிக்கு, திகார் சிறையில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், வினய் சர்மாவும், முகேஷ் குமாரும், துாக்கு தண்டனையை ரத்து செய்யும் கடைசி முயற்சியாக, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, துாக்கு தண்டனையை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்ட, 'வாரன்ட்'டை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், முகேஷ் குமார் மனு தாக்கல் செய்தார்.அத்துடன், துாக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, ஜனாதிபதிக்கு, கருணை மனுவும் அனுப்பினார்.

இது தொடர்பாக, டில்லி அரசு, உயர் நீதிமன்றத்திற்கு அளித்த பதிலில், 'ஜனாதிபதி கருணை மனுவை நிராகரிக்காத வரை, துாக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது.'அப்படியே நிராகரித்தாலும், அன்றைய நாள் முதல், 14 நாட்கள் வரை துாக்கு தண்டனை கைதிக்கு அவகாசம் வழங்க வேண்டும் என, சட்டம் கூறுவதால், 22ம் தேதி துாக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

முகேஷ் குமாரின் மனுவை தள்ளுபடி செய்த டில்லி உயர் நீதிமன்றம், துாக்கு தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, முகேஷ் குமார் செஷன்ஸ் நீதிமன்றத்தில், 'துாக்கு தண்டனையை தள்ளி வைக்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது பதில் அளிக்குமாறு, டில்லி அரசுக்கும், நிர்பயா பெற்றோருக்கும் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.


சட்டத்தில் இடமில்லை

துாக்கு தண்டனையை தள்ளி வைக்கக் கோரும், முகேஷ் குமாரின் மனு, நேற்று டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, மாநில அரசு தாக்கல் செய்த பதில் மனுவை பரிசீலித்த நீதிபதி, முகேஷ் சிங்கின் வழக்கறிஞர் பிருந்தா கோவரின் வாதத்தை கேட்டறிந்தார்.இதையடுத்து, 'கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு, 14 நாட்கள் வரை, குற்றவாளிக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற சட்டத்தில் இடமில்லை' என, தெரிவித்து, வழக்கை இன்று ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், ''முகேஷ் குமாரின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும்; குற்ற வாளிகள் நான்கு பேரையும், ஏற்கனவே அறிவித்தபடி, 22ம் தேதி துாக்கில் போட வேண்டும்,'' என, ஜனாதிபதிக்கு, நிர்பயாவின் தாய் ஆஷாதேவி வேண்டுகோள் விடுத்து உள்ளார். இருந்த போதிலும், துாக்கு தண்டனையில் இருந்து தப்ப, முகேஷ் குமார் அடுத்தடுத்து எடுத்து வரும் கடைசி கட்ட முயற்சிகள் காரணமாக, திட்ட மிட்டபடி, 22ம் தேதி, நான்கு பேருக்கும் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.


துாக்கு தண்டனைக்கு ஏற்பாடுநிர்பயா குற்றவாளி, முகேஷ்குமாரின் கருணை மனு நிலுவையில் உள்ள நிலையில், 22ம் தேதி, துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக, டில்லி அரசுக்கு கடிதம்எழுதியுள்ளதாக, திகார் சிறை நிர்வாகம் சார்பில்,டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும், வரும், 22ம் தேதி நிறைவேற்றப்பட உள்ள துாக்கு தண்டனைக்கு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து, இன்று அறிக்கை அளிக்குமாறு, திகார் சிறை அதிகாரிகளுக்கு, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கருணை மனு நிராகரிப்பு

நிர்பயா வழக்கு குற்றவாளி, முகேஷ் குமார் அனுப்பிய கருணை மனுவை, டில்லி அரசு நிராகரித்து, மாநில லெப்டினன்ட் கவர்னர் அனில் பஜாலுக்கு அனுப்பி வைத்தது. அவரும் அதை நிராகரித்து, உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
svs - yaadum oore,இந்தியா
17-ஜன-202011:20:05 IST Report Abuse
svs //....இந்திய ஜனநாயகத்தில் பணத்திற்கு அப்புறம்தான் பக்தியும், சாமியும், தர்மமும்(எந்தக் கட்சி ஆண்டாலும்).....//......இலவசம் , படிக்காமல் பட்டம் , வேலை பார்க்காமல் சம்பளம் , போன்றவற்றிற்கும் இந்தியா ஜனநாயகத்தில் வாக்குகள் உண்டு ......பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்........
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17-ஜன-202008:55:39 IST Report Abuse
Natarajan Ramanathan கேவலமான இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள இவ்வளவு சிக்கல்களையும் ஒரே என்கவுண்டரில் தீர்த்த .ஹைதராபாத் போலீசுக்கு ஏதாவது ஜனாதிபதி அவார்டு கொடுங்கப்பா. அப்போதுதான் வில்சன் கொலைக்கும் அதே ஞாயம் கிடைக்கும்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
17-ஜன-202007:36:26 IST Report Abuse
Darmavan இது நம் நாட்டின் சட்ட விதிமுறை எவ்வளவு ஓட்டைகளுடன் உள்ளது என்று காட்டுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X