சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'‛குண்டாசில்' சுள்ளான் கைது

Added : ஜன 16, 2020
Advertisement

சிவகங்கை : வழிப்பறி, கொலை, கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய ஆவரங்காடு சுள்ளான் கருப்பையாவை 28, குண்டாசில் பூவந்தி போலீசார் கைது செய்தனர்.

திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காட்டை சேர்ந்த முனியாண்டி மகன் சுள்ளான் கருப்பையா 28. கடந்த ஆண்டு டிச.,8 ம் தேதி காலை 7:00 மணிக்கு பூவந்தி தனியார் மகளிர் கல்லுாரி எதிரே நடந்து சென்ற கீழபூவந்தி வீரணன் 50, என்பவரை வழிமறித்தார். அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்து 250யை வழிப்பறி செய்தார். பூவந்தி போலீசார் வழக்கு பதிந்து, சுள்ளான் கருப்பையாவை கைது செய்து, மதுரை சிறையில் அடைத்தனர்.

இவர் மீது மதுரையில் கொலை வழக்கு, சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ரோஹித்நாதன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார். சிறையில் இருந்த சுள்ளான் கருப்பையாவிற்கு, அதற்கான உத்தரவு நகலை பூவந்தி இன்ஸ்பெக்டர் உமாதேவி ஒப்படைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X