பொது செய்தி

தமிழ்நாடு

'ஷாப்பிங் திருவிழா 2020' வர்த்தக கண்காட்சி துவக்கம்

Added : ஜன 16, 2020
Advertisement
 'ஷாப்பிங் திருவிழா 2020' வர்த்தக கண்காட்சி துவக்கம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை நடத்தும் நான்கு நாட்கள், 'ஷாப்பிங்' திருவிழா வர்த்தக கண்காட்சி நேற்று துவங்கியது.பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின், 13வது ஆண்டு வர்த்தக கண்காட்சி கே.கே.ஜி., மண்டபத்தில் நேற்று துவங்கியது. 'ஷாப்பிங் திருவிழா 2020' கண்காட்சியை, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் துவங்கி வைத்தார்.தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன், கண்காட்சி தலைவர் முத்துசாமி முன்னிலை வகித்தனர். கண்காட்சியில், மத்திய அரசின் கயிறு வாரியம், தென்னை வளர்ச்சி வாரியம், வாசனை பொருட்கள் வாரியம்; தமிழக அரசின் மகளிர் திட்ட குழுக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின், 90 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.நேற்று துவங்கிய கண்காட்சி, வரும், 19ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. இதில், குழந்தைகள் விளையாட்டு அரங்கமும் இடம் பெற்றுள்ளது.பொதுமக்கள் பங்கேற்று, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பொருட்களை வாங்கி பயன்பெறலாம்; குடும்பத்துடன் பொழுது போக்காகவும் வருகை தரலாம், என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X