பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

Added : ஜன 16, 2020
Advertisement
 மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் நடந்த மஞ்சுவிரட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இப்பகுதியில் அனைத்து கிராமங்களிலும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாடுகளுக்கு பொங்கல் வழிபாடு நடத்தியபின் மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம்.

நேற்று அனைத்து கிராமங்களிலும் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. சிங்கம்புணரி முழுவீரன் தெருவில் உள்ள தொழுவத்தில் கிராமத்தார்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். சிங்கம்புணரி சீரணி அரங்கம் முன்பு மதியம் 12:00 மணிக்கு மஞ்சுவிரட்டு துவங்கியது. சேவுகமூர்த்தி அய்யனார் கோயில் காளைகள் ஊர்வலமாக பாரம்பரிய முறைப்படி மரியாதையுடன் அழைத்து வரப்பட்டன.

அதை மாடுபிடி வீரர்கள் தொட்டு வணங்கினர். அதைத் தொடர்ந்து கட்டுமாடுகளும், தொழு மாடுகள் என 300 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில் ஒரு சில மாடுகள் மட்டும் பிடிபட்டன. பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் வெளியேறின. *அ.காளாப்பூரில் நடந்த மஞ்சுவிரட்டில் கிராமத்தினர் ஒவ்வொரு தொழுவாக சென்று 100க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டனர். மு.சூரக்குடியில் நடந்த மஞ்சுவிரட்டிலும் 100க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டனர்.

கிருங்காக்கோட்டை, பிரான்மலை, எஸ்.புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதி களிலும் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. சிங்கம்புணரி மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 36 பேர் காளைகள் முட்டி காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் அட்டப்பட்டி வசந்தகுமார் 18, வேங்கைப்பட்டி சதீஸ்குமார் 27, சொக்கலிங்கபுரம் முத்துக்குமார் 29 ஆகிய 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X