பொது செய்தி

தமிழ்நாடு

திருப்போரூரில் திருவள்ளுவர் தின விழா

Added : ஜன 16, 2020
Advertisement
 திருப்போரூரில் திருவள்ளுவர் தின விழா

திருப்போரூர்:திருப்போரூரில், திருவள்ளுவர் தின விழா நேற்று நடந்தது.
திருப்போரூர், திருக்குறள் பேரவை சார்பில், திருவள்ளுவர் தின விழா, தலைவர் விஸ்வநாதன் தலைமையில், நேற்று நடந்தது.இதில், செயலர் சம்பத்குமார், பொருளர் சரவணன் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளரான சமூக ஆர்வலர் சிவராமன் உட்பட பலர் பங்கேற்று, திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.மேலும், விழாவில், திருக்குறலின் சிறப்பை எடுத்து சொல்லுதல், இதைச் சார்ந்து மாணவர்களிடையே பல போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து திட்டமிடப்பட்டது.
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பத்தில், திருவள்ளுவர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழ் பற்றாளர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று, திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, பஸ் நிலையத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, கொண்டாடினர்.இதில்,100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அந்த வளாகத்தை, சிறுவர்கள் மாக்கோலம் இட்டு அலங்கரித்து இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X