பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கைக்கு ரூ.2.66 கோடியில் விளையாட்டு உபகரணங்கள்

Added : ஜன 16, 2020
Advertisement

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகள், 12 பேரூராட்சிகளில் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் அம்மா இளைஞர் விளையாட்டுப்போட்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக மாவட்டம் முழுவதும் ரூ.2.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்ட துவக்க விழா சிவகங்கை அருகே இலந்தங்குடிபட்டியில் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் விளையாட்டுக்களை துவக்கி வைத்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ், உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X