பொது செய்தி

தமிழ்நாடு

தொழில்முனைவோர் பயிற்சி

Added : ஜன 16, 2020
Advertisement

சிவகங்கை : சிவகங்கை அருகே அரசனுார் பாண்டியன் சரஸ்வதி இன்ஜி., கல்லுாரியில் பெண்களுக்கான இலவச தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்படும்,'' என சிறு, குறுந்தொழில் நிறுவன உதவி இயக்குனர் உமா சந்திரிகா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ஜன.,21 முதல் 31 வரை இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படும். இதில் வயது 18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். இப்பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசின் சான்று வழங்கப்படும். பயிற்சியில் தொழில் துவங்க தேவையான ஆலோசனை வழங்கப்படும். இது மட்டுமின்றி திட்ட அறிக்கை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி, ஜி.எஸ்.டி., சார்ந்த விபரங்கள் பயிற்சியில் கற்பிக்கப்படும். பயிற்சியி்ல் பங்கேற்று தொழில் முனைவோராக விரும்பும் பெண்கள் 98420 35441ல் பெயர்களை பதிவு செய்து பயன்பெறலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X