பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி

Added : ஜன 16, 2020
Advertisement

சிவகங்கை : சிவகங்கை பகுதியில் உழவன் செயலியை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இத்தாலுகாவில் மீனாட்சிபுரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை திட்டத்தில் பண்ணைப்பள்ளி பயிற்சி நடந்தது. வேளாண் இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற விவசாயிகளுக்கு கடலை சாகுபடி குறித்த முதல் பண்ணை பயிற்சி அளிக்கப்பட்டது. துணை பேராசிரியர் விமலேந்திரன் பேசினார். இப்பயிற்சியின் போது விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம் செய்து தரப்பட்டு அதை பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளித்தனர். வேளாண்மை உதவி இயக்குநர் தங்கப்பாண்டியன், அலுவலர்கள் பரமேஸ்வரன், சதீஷ், உதவி அலுவலர்கள் பானுப்பிரியா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X