பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் சுற்றுலா பொங்கல் விழா வெளிநாட்டுப் பயணியர் உற்சாகம்

Added : ஜன 16, 2020
Advertisement
 மாமல்லபுரத்தில் சுற்றுலா பொங்கல் விழா வெளிநாட்டுப் பயணியர் உற்சாகம்

மாமல்லபுரம்:மாமல்லபுரம் கிராமத்தில், சுற்றுலா பொங்கல் விழாவில், வெளிநாட்டுப் பயணியர், நாட்டுப்புற கலைகள் ரசித்து, பாரம்பரிய விளையாட்டுகளில் பங்கேற்று, மாட்டு வண்டியில் பயணித்து, குதுாகலமடைந்தனர்.
மாமல்லபுரத்தில், வெளிநாட்டுப் பயணியர், தற்போது குவிகின்றனர். இவர்கள், கலையார்வ பொழுதுபோக்கிற்கு, தமிழக சுற்றுலாத் துறை, ஒரு மாத, நாட்டிய விழாவை, நடத்துகிறது. தமிழர் பாரம்பரிய பொங்கல் பண்டிகை கொண்டாடும் தற்போது, இதன் கலாசார சிறப்பை அறியவும், பயணியர் விரும்புகின்றனர்.இதற்காக, மாமல்லபுரம் அடுத்த, வடகடம்பாடியில், சுற்றுலா பொங்கல் விழாவை, இத்துறை, நேற்று முன்தினம் கொண்டாடியது. சுற்றுலாத் துறையினர், பயணியரை, மாமல்லபுரத்திலிருந்து, அங்கு அழைத்துச் சென்றனர்.
நுழைவிடத்தில், செங்கல்பட்டு கலெக்டர், ஜான் லுாயிஸ், தமிழர் பாரம்பரிய உடையான, வேட்டி, சட்டை அணிந்து, பயணியருக்கு மாலை அணிவித்து வரவேற்றார். துறையினர், சந்தன, குங்கும பொட்டு இட்டனர்.நாட்டுப்புற கலைஞர்கள், இசைத்து, கரக நடனமாடி செல்ல, பயணியர் வீதிகளில் வலம் வந்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்க, வீட்டு வாயில், வண்ண கோலங்களை ரசித்து, கிராம கலாசாரம் அறிந்தும், நெற்பயிர் விவசாயம், கிணற்று பாசனம் கண்டும், வியந்தனர்.அம்மன் கோவிலில், பெண்கள், பானையில் பொங்கல் பொங்கி, பயணியர் கிளறி, பொங்கல் ருசித்தனர். உற்சாக கரக நடனம் ஆடி, பரதம் ரசித்தனர். பானை உடைத்து, இசை நாற்காலி சுற்றி, கயிறு இழுத்து விளையாடினர்.
மாட்டு வண்டியில், வீதிகளில் வலம் வந்து, குதுாகலித்தனர். ஆலமர நிழல், அருகாமை ஏரி என, இயற்கைச்சூழலை ரசித்தனர்.விளையாட்டில் வென்ற பயணியருக்கு, நினைவுப் பரிசு வழங்கி, கலெக்டர் கவுரவித்தார். மாமல்லபுரம், சுற்றுலா அலுவலர் சக்திவேல், அ.தி.மு.க., மாவட்ட செயலர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பிரான்ஸ் நாட்டுப் பயணியர் கூறியதாவது:தமிழர் பண்டிகை கலாசாரம் வியக்க வைக்கிறது. விவசாய உழைப்பின் பெருமையை, பொங்கல் பண்டிகையில் அறிந்து வியந்தோம். பாரம்பரிய கலைகள், விளையாட்டும் வியப்பை அளிக்கிறது. மாமல்லபுரம் சிற்பம் காண, சுற்றுலா வந்த எங்களுக்கு, பொங்கல் பண்டிகை கொண்டாட்ட அனுபவம் மறக்காது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X