தமிழ்நாடு

அதிகரிப்பு! தேர்தலுக்கு பின் முதல் கிராம சபை கூட்டம்; சிவகங்கை மக்களிடம் எதிர்பார்ப்பு

Added : ஜன 16, 2020
Advertisement

சிவகங்கை : ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின் புதிய தலைவர், துணை தலைவர்களை கொண்டு ஜன.26 ல் முதல் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதால், கிராம ஊராட்சி மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துஉள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடந்து முடிந்தது. இதில், மாவட்ட ஊராட்சி தலைவர், கவுன்சிலர், ஒன்றிய தலைவர், துணை தலைவர், கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். குறிப்பாக கிராமங்களின் வளர்ச்சிக்கு கிராம ஊராட்சிகளின் பங்களிப்பு அதிகம் தேவை. இதற்காகவே ஆண்டுதோறும் ஜன.,26 குடியரசு தினம், மே., 1 தொழிலாளர் தினம், ஆக.,15 சுதந்திர தினம், அக்.,2 காந்தி ஜெயந்தி நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் நடக்கிறது.

ஊராட்சி தலைவர், அவர் இல்லாத பட்சத்தில் துணை தலைவர் இக்கூட்டத்தை நடத்தலாம். தலைவர்களுக்கு கிராம சபை புதுசு: 2020ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து, கிராம ஊராட்சி தலைவராக தேர்வானவர்கள் முதற்கட்டமாக ஜன.,26 ல் நான்காம் காலாண்டுக்கான கிராமசபை கூட்டத்தை நடத்த உள்ளனர். மார்ச்- நிதியாண்டாக இருப்பதால், ஆண்டின் முதல் கிராம சபை கூட்டத்தில் கிராமத்திற்கு தேவையான வளர்ச்சி பணி திட்டங்கள் குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டும்.

இது தவிர அரசு வழங்கும் புதிய திட்டங்கள் குறித்தும் விவாதித்து, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கிராம சபையை ஒரே கிராமத்தில் நடத்தாமல், சுழற்சி முறையில் அனைத்து கிராமத்திலும் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். இதில் பங்கேற்போரில் 3 ல் ஒரு பங்கு கட்டாயம் பெண்கள் இருக்க வேண்டும்.

கிராம சபையில் 300 பேர் கட்டாயம்: மக்கள் தொகை 500 உள்ள ஊராட்சியில் 50 பேர், 501 முதல் 3 ஆயிரம் மக்கள் தொகைக்கு 100 பேர், 3001 முதல் 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு 200 பேர், 10 ஆயிரத்திற்கு மேல் உள்ள மக்கள் தொகைக்கு 300 பேர் வரை கிராம சபையில் பங்கேற்று ஆலோசனை வழங்க வேண்டும்.எனவே ஜன., 26 குடியரசு தினத்தன்று நடக்கும் கிராம சபை கூட்டத்தில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், தங்கள் பகுதிக்கு அதிக வளர்ச்சி பணிகளை கொண்டு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X