ராமநாதபுரம் : ராமநாதபுரம், பரமக்குடி அரசினர் தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.,) நிலையத்தில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பின் கீழ்தொடங்கப்பட்டுள்ள எலக்ட்ரீசியன் பிரிவுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பயிற்றுனர் பணியிடத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், பரமக்குடி தொழிற்பயிற்சி நிலையத்தில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பின் கீழ் தொடங்கப்பட்டுள்ளஎலக்ட்ரீசியன் தொழிற்பிரிவுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் தற்காலிக அடிப்படையிலான பயிற்றுனர் காலிப்பணியிடத்தை நேரடிநியமனம் மூலம் பூர்த்தி செய்யப்படவுள்ளது.1.1.2020 அன்று 18 வயது பூர்த்தி செய்தவராகவும் பொது பிரிவில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தங்களது பெயர், தொழில் நுட்பக் கல்வித்தகுதி, ஜாதி சான்று, முன் அனுபவ சான்று, மற்றும் வீட்டு முகவரியுடன் தொலை பேசி எண்ணையும் குறிப்பிட்டு 3.2.2020க்குள் முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்ராமநாதபுரம், பரமக்குடி என்ற முகவரியில் அனுப்பி வைக்கலாம், என ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரமேஷ்குமார்,பரமக்குடி தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குமரவேல் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE