குரூப்-2 போட்டித்தேர்வு இலவச பயிற்சி வகுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குரூப்-2 போட்டித்தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

Added : ஜன 16, 2020
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம்மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப் படவுள்ள குரூப்-2 போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜன.,19ல் தொடங்கப்படவுள்ளன.குரூப்-2 போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்சார்பில் ஜன.,19ல்பரமக்குடி ஆயிரவைசிய கல்வியியல் கல்லுாரியில் காலை

ராமநாதபுரம் : ராமநாதபுரம்மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப் படவுள்ள குரூப்-2 போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜன.,19ல் தொடங்கப்படவுள்ளன.குரூப்-2 போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்சார்பில் ஜன.,19ல்பரமக்குடி ஆயிரவைசிய கல்வியியல் கல்லுாரியில் காலை 10:30மணிக்கு தொடங்கப்படவுள்ளது.

இப்பணிக்காலியிடத்திற்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி ஆகும். இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இதுவரைடி. என்.பி.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று 200க்கும் மேற்பட்டவர்கள் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்ய மற்றும் கூடுதல் தகவல்களை பெற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 94431-23351, 94873-75737 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X