வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு: வீணடிக்கப்பட்ட மழைநீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு: வீணடிக்கப்பட்ட மழைநீர்

Added : ஜன 16, 2020
Share

கமுதி : கமுதி அருகே வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் மழைநீர், ரோட்டோரங்கள் தேங்கி, விவசாயத்திற்கு பயன்படாமல் வீணாகியுள்ளது.

விருதுநகரிலிருந்து திருச்சுழி வழியாக கோடாங்கிபட்டி, முத்துப்பட்டி, வடுகபட்டி, மூலக்கரைப்பட்டி, இடைச்சியூரணி வழியாக புளிச்சிகுளம் தடுப்பணையில் சேமிக்கப்பட்டு, , தலைவநாயக்கன்பட்டி அதனை சுற்றியுள்ள 1,200 எக்டேர் பாசன நிலங்களுக்கு பயன்படும் வகையில் நாராயணகாவிரி வரத்து கால்வாய் உள்ளது.

இந்த கால்வாய் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உருக்குலைந்துள்ளது. பல இடங்களில்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழைக்கு, கால்வாயில் வந்த மழைநீர் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல், ரோட்டோரங்களில் தேங்கி வீணாகியுள்ளது.

நாராயணகாவிரியில் மழைநீர் வந்தும், கண்மாய்களுக்கு செல்ல முடியாமல், ஆங்காங்கே தேங்கியுள்ளது. துார்ந்துபோன நாராயணகாவிரி கால்வாயினை மராமத்து செய்து ஆக்கிரமிப்பினை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X