பொது செய்தி

தமிழ்நாடு

மரபு விதைகளை சேகரிக்கும் பரமேஸ்வரன்

Added : ஜன 16, 2020
Advertisement
மரபு விதைகளை சேகரிக்கும் பரமேஸ்வரன்

ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், பாரம்பரிய மரபு விதைகளை சேகரித்து பயிர் செய்து வருகிறார்.இவரின் பெற்றோர் விவசாயிகளே. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டு பாரம்பரிய விதைகளை தேடிப்பிடித்து பயிரிட்டு வருகிறார். இதற்காக குட்டியாகவுண்டனுாரில் 6 ஏக்கர் நிலத்தில் அரிய வகை காய்கறி பயிர்களை பயிரிட்டுள்ளார். 2014 முதல் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று நாட்டுரக விதைகளை சேகரித்துள்ளார். இதற்காக ஆதிவகை விதை சேகரிப்பு மையத்தை ஏற்படுத்தி, அதில் அரியவகை விதைகளை வைத்துஉள்ளார். இவர் 300க்கும் மேற்பட்ட நாட்டுக் காய்கறி, பழ விதைகளை அருகில் உள்ளவர்களுக்கு பயிரிடகொடுத்து அதிலிருந்து வரும் விதைகளை சேமித்து வைத்துள்ளார்.பரமேஸ்வரன் கூறியதாவது:தமிழகத்தில் 500க்கும்மேற்பட்ட கத்தரி வகைகள் உள்ளன. இளஞ்சிவப்பு வெண்டை உட்பட 13 அரியவகை வெண்டை, 30 வகையான கத்தரிக்காய், 30 வகையான சுரைக்காய், 10 வகை உள்நாட்டு மக்காச்சோளம், பீன்ஸ் விதைகள் உள்ளன.விதைத் திருவிழாக்களில் கலந்து கொண்டு அரியவகை விதைகளை சேகரித்து வருகிறேன். மாடி மற்றும் கொல்லைப் புறங்களில் தோட்டம் அமைக்கவும் பயிற்சி கொடுத்து, சேகரித்து வைத்துள்ள இந்த அரிய வகை விதைகளை விருப்பம் உள்ளவர்களின் மாடித் தோட்டங்களில் விளைய வைத்து பெருக்கி வருகிறேன், என்றார். இவரை பாராட்ட, ஆலோசனை கேட்க 85263-66796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X