சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் வாலிபர் மூளைச்சாவு 8 பேருக்கு மறுவாழ்வு

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (2)
Advertisement

பரமக்குடி:பரமக்குடி விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் சரத்குமார் உடல் உறுப்புகள் எட்டு பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.





ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடி காந்தி நகரைச் சேர்ந்த வெற்றிவேல்- - ராஜேஸ்வரி மகன் சரத்குமார், 23. சிவகங்கையில் தனியார் வங்கியில் பணிபுரிந்தார்.ஜன. 11ம் தேதி பணி முடிந்து இளையான்குடி ரோடு வழியாக டூவீலரில் பரமக்குடிக்கு வந்தார். அதிகரை விலக்கு ரோட்டில் நிலைதடுமாறி டூவீலர் விபத்துக்குள்ளானது. பலத்த காயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் ஏற்கனவே மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சரத்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர்.மதுரை, சென்னை மருத்துவக்கல்லுாரி டீன்கள் மூலம் உடலுறுப்புகள் எடுக்கப்பட்டது.இதயம் விமானம் மூலம் சென்னைக்கும், கண்கள் திருச்சிக்கும், சிறுநீரகங்கள் மதுரை, தஞ்சாவூருக்கும் வழங்கப்பட்டது. இதன்மூலம் எட்டு பேர் மறுவாழ்வு பெற்றுஉள்ளனர்.


பறந்து வந்த கல்லீரல்

சரத்குமாரின் கல்லீரல் கோவை மெடிக்கல் சென்டரில் உள்ள நோயாளிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் 30 நிமிடங்களில், மதுரையில் இருந்து கோவைக்கு கல்லீரல் எடுத்து வரப்பட்டது. கோவை வட்டமலையாம் பாளையத்தில் தரையிறங்கி அங்கிருந்து கல்லீரல் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும், போக்குவரத்தை போலீசார் நிறுத்தி தடையின்றி செல்ல வழி செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat - Chennai,இந்தியா
17-ஜன-202023:15:32 IST Report Abuse
Venkat In 8 how many were from other countries
Rate this:
Share this comment
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
17-ஜன-202019:38:45 IST Report Abuse
naadodi ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X