சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியுடன் தவறான பழக்கத்தில் இருந்த டிரைவர் கொலை

Added : ஜன 16, 2020
Advertisement

உத்திரமேரூர்:மனைவியுடன் தவறான பழக்கம் வைத்திருந்ததால், கார் டிரைவரை, கணவர் வெட்டி கொன்ற சம்பவம், உத்திரமேரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரமேரூர், கிழக்கு கம்மாள தெருவில், நேற்று முன்தினம், இரவு, 8:45 மணியளவில், கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக, உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் விசாரணையில், இறந்த நபர், உத்திரமேரூர், தண்டுகார தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் மதன், 26, என்றும், கார் டிரைவராக பணியாற்றி வந்தார் என்பது தெரிய வந்தது.
மதன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து, போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தினர். மதனின் மொபைல்போன் எண்ணில் அதிகம்பேசிய நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றது.விசாரணையில், உத்திரமேரூர், கம்மாள தெருவில் உள்ள எலக்ட்ரீஷியன் தசரதன்,36, மனைவியுடன், மதனுக்கு தவறான பழக்கம் இருந்து வந்ததாக தெரிய வந்தது.தன் மனைவியுடன் தவறான தொடர்பு இருந்ததால், மதனை, தசரதன் கண்டித்து மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து, மதன் மறைமலை நகரில் கார் டிரைவாக வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு, நேற்று முன்தினம் மதன், உத்திரமேரூர் வந்துள்ளார்.இதையறிந்த தசரதன், மதனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, உத்திரமேரூர், கம்மாள தெருவில் சென்ற மதனை, தசரதன் மற்றும் அவனது கூட்டாளிகள் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளனர்.கைது செய்யப்பட்ட தசரதன் அளித்த தகவலை தொடர்ந்து, உத்திரமேரூரை சேர்ந்த கண்ணாயிரம், 24; தேவா, 30; கன்னியப்பன், 34; கார்த்திகேயன், 32 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X