பொது செய்தி

தமிழ்நாடு

காணும் பொங்கல் சுற்றுலா

Added : ஜன 16, 2020
Share
Advertisement
 காணும் பொங்கல் சுற்றுலா

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், இன்று குவியும், சுற்றுலாப் பயணியர், போக்குவரத்து குறித்து, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு கலெக்டர், ஜான் லுாயிஸ், கோட்டாட்சியர் செல்வம், எஸ்.பி., கண்ணன், ஏ.எஸ்.பி., சுந்தரவதனம், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சாந்தகுமார், செயல் அலுவலர் லதா, வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன் உள்ளிட்டோருடன், இங்கு ஆய்வு செய்து ஆலோசித்தார்.அதைத் தொடர்ந்து, அறிக்கையில், அவர் கூறியிருப்பதாவது:அரசு, மாநகர் பஸ்கள், மாமல்லபுரம், புறவழிப்பாதை சந்திப்பு, மாமல்லன் சிலை பகுதியில் நிறுத்தப்படும். இங்கிருந்து, பஸ் நிலைய பகுதிக்கு, மினி பஸ்கள் இயக்கப்படும்.சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி பகுதிகளிலிருந்து, மாமல்லபுரம் வரும், சுற்றுலா பஸ்கள், வேன்கள், பூஞ்சேரி, அரசு மருத்துவமனை பகுதி மைதானத்தில் நிறுத்தப்படும். இங்கிருந்து, சிறப்பு வேன்கள், தலா, 10 ரூபாய் கட்டணத்தில், காலை, 8:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, இயங்கும்.
கங்கைகொண்டான் மண்டபம், பஸ் நிலையம், ஐந்து ரதங்கள் பகுதிகள் வழியே, சுற்று தடத்தில் கடந்து, பக்கிங்ஹாம் கால்வாய்க்கரை சாலை வழியே, நிறுத்துமிடம் செல்லும். ஒரே பயணச்சீட்டில், நாள் முழுதும் பயணிக்கலாம்.தனியார் கார், ஐந்து ரதங்கள் பின்புற, கல்பாக்கம், வெண்புருஷம் சாலை பகுதிகளில் நிறுத்தப்படும். இங்கிருந்து, ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில், பயணியர், சிற்ப பகுதி செல்லலாம்.இருசக்கர வாகனங்களை, புறவழிப்பாதை சந்திப்பு, மாமல்லன் சிலை, கங்கைகொண்டான் மண்டபம் சந்திப்பு, திருக்கழுக்குன்றம் சாலை, பக்கிங்ஹாம் கால்வாய்க்கரை சாலை, ஐந்து ரதங்கள் சாலை வழியே, ஒரே வழித்தடத்தில் அனுமதித்து, ஐந்து ரதங்கள், வணிக வளாக, நிறுத்த பகுதியில் நிறுத்தப்படும்.
கடற்கரைக்கோவில் சாலையில், வாகனங்களுக்கு, முற்றிலும் அனுமதி இல்லை. போலீஸ் எஸ்.பி., கண்ணன், ஏ.எஸ்.பி., சுந்தரவதனம், வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் லதா உள்ளிட்டோருடன்,நிறுத்துமிட பகுதிகளை ஆய்வு செய்து, அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X