சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரமக்குடி, தேனி விபத்துகளில் மூவர் பலி

Added : ஜன 16, 2020
Advertisement
பரமக்குடி, தேனி  விபத்துகளில் மூவர் பலி

பரமக்குடி, பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர், காரில் இருந்த பெண் பலியாகினர்.ராமநாதபுரம் கேணிக்கரையைச் சேர்ந்த பிச்சைமணிமாறன் மகன் ரமேஷ். இவர் தாயார் பிரேமா 60, மனைவி, குழந்தைகளுடன் மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு நேற்று மாலை காரில் வந்தார். ரமேஷ் காரை ஓட்டினார்.பரமக்குடி அருகே திருவரங்கி நான்குவழிச்சாலையில் வந்தபோது, கார் நிலைதடுமாறி பள்ளத்தில் பாய்ந்தது. அங்கு ரோட்டோரம் ஆடு மேய்த்து கொண்டிருந்த, திருவரங்கியை சேர்ந்த சிவக்குமார் 57, மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.காருக்குள் இருந்த பிரேமாவும் இறந்தார். சீட் பெல்ட் அணிந்திருந்ததால் ரமேஷ் காயமின்றி தப்பினார். விழுந்ததும் கார் தீப்பற்றியது. அக்கம்பக்கத்தினர் காரில் இருந்தவர்களை மீட்டனர். பரமக்குடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.ரமேைஷ பார்த்திபனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் கைது செய்து விசாரிக்கிறார்.ஆண்டிபட்டிவிருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் அசோக்குமார் 40. இவர் மனைவி அமுனாமேரி 36, மகள் அனுசுயா 6, ஆகியோருடன் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மணியாரம்பட்டியில் உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று மாலை மூவரும் டூவீலரில் சிவகாசி புறப்பட்டனர்.மாலை 5:30 மணியளவில் ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் அருகே மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வந்த கார் , டூவீலரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அமுனாமேரி, சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அசோக்குமார், அனுசுயா தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கார் டிரைவர் ஜோதிராஜனிடம் 40, ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X