தமிழ்நாடு

வறண்ட கண்மாய்களில் நீர் நிறைந்தது; வலசை வரும் வெளிநாட்டு பறவைகள் புறக்கணிப்பு!

Added : ஜன 16, 2020
Advertisement
வறண்ட கண்மாய்களில் நீர் நிறைந்தது; வலசை வரும் வெளிநாட்டு பறவைகள் புறக்கணிப்பு!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மழை அதிகளவு பெய்துள்ளது.மாவட்டத்தின் பல கண்மாய்களில் தண்ணீர் குறிப்பிட்ட அளவு தேங்கி உள்ள நிலையில் கண்மாய்களை பறவைகள் புறக்கணித்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2015க்கு பிறகு அதிகளவாக 914.23 மி.மீ., மழையளவு 2019 ல் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழையில் மட்டும் 763.23 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் மாவட்டத்திலுள்ள பல கண்மாய்களுக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளன. சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், மேல, கீழச்செல்வனுர், சக்கரக்கோட்டை, தேர்தங்கல் உள்ளிட்ட பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் ஆயிரக்கணக்கில் வலசை வருகின்றன.

தற்போது இந்த சரணாலயங்களில் சக்கரக்கோட்டை சரணாலயத்தை தவிர மற்ற பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் அதிகளவில் வருகை புரிந்து கூடுகட்ட தொடங்கியுள்ளது. பெரும்பான்மை கண்மாய்களில் தண்ணீர் தேங்கி இருந்தும் பறவைகள் புறக்கணித்துஉள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 1980 ஆண்டு முதல் தமிழ்நாடு வனத்துறை மூலம் கருவேல்மரங்கள் பறவைகள் சரணாலயத்தில் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. தற்சமயம் இந்த கருவேல்மரங்கள் நன்கு வளர்ந்து கூடுகட்டுவதற்கு பயன்படுகின்றன. கண்மாய்களில் சீமை கருவேல மரங்கள் தற்போது நிறைய அளவில் வளர்ந்துள்ளன. இங்கு கூடுகளை கட்டினால் முட்டை, குஞ்சுகளுக்கு ஆபத்து நேரும் என்பதால் கண்மாய்களில் தண்ணீர் இருந்ததாலும் பறவைகள் அவற்றை புறக்கணிக்கின்றன, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X